- Advertisement -
Homeபொழுதுபோக்குவிவாகரத்துக்கு மனு தாக்கல் செய்த நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு

விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்த நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் மற்றும் இயக்குனர் செல்வராகவனின் தம்பி தனுஷ். இவர் பிரபலமான நடிகராக முன்னணி வரிசையில் இருந்து வருகிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு, நடிகர் தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் தனுஷை விட ஐஸ்வர்யா ஐந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் ரஜினி, கஸ்தூரிராஜா இருவீட்டார் தரப்பிலும் சம்மதத்துடன் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் 2004 ஆம் ஆண்டில் நடந்தது. இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இப்போது இருவருமே டீன் ஏஜ் வயதில் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தங்களது டுவிட்டர் பக்கத்தில், நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக அறிவித்தனர்.

- Advertisement -

இது தமிழ் திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் இது கணவன் மனைவிக்குள் ஏற்பட்டுள்ள சாதாரண சண்டை தான். நாளடைவில் இவர்களது மன வேறுபாடுகள் மறைந்து மீண்டும் வாழ்க்கையில் இணைந்து விடுவார்கள் என்று தான் ரசிகர்களும், சினிமா துறையினரும் நினைத்திருந்தனர்.

ஆனால் இதற்கு மாறாக, கடந்த வாரத்தில் நடிகர் தனுஷூம், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதுவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மனுவில், 2004 ஆம் ஆண்டில் நடந்த இந்த திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

தனுஷூடன் 18 ஆண்டுகள் மனம் ஒத்துப்போய் சந்தோஷமாக வாழ்ந்த நிலையில், இப்படி இரண்டு மகன்கள் வளர்ந்த நிலையில் உள்ள போது, இப்படி நடந்த திருமணத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று ஐஸ்வர்யா மனுதாக்கல் செய்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக ஏமாற்றி, பொய் சொல்லி திருமணம் செய்பவர்களை தான், இப்படி திருமணத்தையே ரத்து செய்ய சொல்வார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது நீதிமன்றம். இன்று அவர்களது வழக்கை குடும்ப நல நீதிமன்றம் விசாரணை நடந்தது. வரும் அக்டோபர் 7ம் தேதி, இந்த வழக்கு தொடர்பான நேரடி விசாரணைக்கு நடிகர் தனுஷூம் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆறு மாதங்கள் அவகாசம் அளித்து, இந்த வழக்கில் அவர்களை நீதிபதி, நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்