- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2, தக்லைப் படப்பிடிப்பில் பிஸி; தேர்தல் பிரசாரத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் - நடுவில்...

இந்தியன் 2, தக்லைப் படப்பிடிப்பில் பிஸி; தேர்தல் பிரசாரத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் – நடுவில் இந்த வேலை பார்த்தாரா கமல்ஹாசன்?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் இப்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, இந்தியன் 3, தக்லைப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் படம் தந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு, இப்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். அதே போல் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஒரு மாத காலமாக நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவரான அவர், இந்த தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாத போதும், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக திமுக கூட்டணிகள் இடம்பெற்ற கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்காக, தொகுதி வாரியாக நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நடிகர் கமல்ஹாசன், வேட்பாளர்கள் ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையே மணிரத்னம் இயக்கத்தில், தக்லைப் படத்திலும் நடித்து வருகிறார். அத்துடன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன், இந்தியன் 2 படத்திலும், மும்மரமாக நடித்து வருகிறார். இந்த தீவிரமான பணிகளுக்கு மத்தியில், நடிகர் கமல்ஹாசன் தனது மய்யம் என்ற பத்திரிக்கையில் இடம்பெற்ற தனது கட்டுரைகளை தொகுத்து சமீபத்தில் ஒரு புத்தகமாக வெளியிட்டார்.

- Advertisement -

அதாவது சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் மய்யம் என்ற பத்திரிகையை சொந்தமாக நடத்தினார். சில ஆண்டுகள் நடத்திய அந்த பத்திரிக்கையில், கமல்ஹாசன் சொந்தமாக கட்டுரைகள் எழுதினார். அந்த கட்டுரைகளை தொகுத்து சமீபத்தில் தான் ஒரு புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தை பலருக்கும் வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில், தற்போது கமல்ஹாசன் விரைவில் கவிதை புத்தகம் வெளியிட அதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார். அதாவது சொந்தமாக அவர் கவிதைகள் எழுதி, அதை ஒரு தொகுப்பாக கவிதை நூலாக விரைவில் வெளியிட இருக்கிறார். ஒருபுறம் பிஸியான நடிப்பு, ஒரு புறம் அரசியல் பணிகளில் பிசியாக இருந்து வரும் கமல்ஹாசன், இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், கவிதைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று அவர் ரசிகர்கள் ஆச்சரியத்தில் அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்