- Advertisement -
Homeபொழுதுபோக்குநாங்க மட்டும் விட்டுருவோமா, கில்லி படத்துக்கு போட்டியாக களம் இறக்கப்படும் மாஸ் ஹீரோ படம்; சபாஷ்...

நாங்க மட்டும் விட்டுருவோமா, கில்லி படத்துக்கு போட்டியாக களம் இறக்கப்படும் மாஸ் ஹீரோ படம்; சபாஷ் சரியான போட்டி

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த நான்கு மாதங்களாக பெரிய அளவில் வெற்றி படங்களை இல்லாத நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய சோர்வில் இருந்து வந்தனர். நடப்பாண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்தில் இதுவரை நான்கு மாதங்களாக, தமிழில் வந்த படம் எதுவுமே ரசிகர்களை பெரிய அளவில் திருப்தி படுத்தவில்லை.

ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லால் சலாம் படமும் ஏமாற்றத்தை தந்தது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த அயலான், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் போன்ற படங்களும் ஊற்றிக் கொண்டன. சில படங்கள் வசூல் ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் திருப்தியை தந்தாலும், ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் எந்த படமும் இல்லை என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே மலையாளத்தில் வெளிவந்த பிரமயுகம், பிரேமலு, ஆடுஜீ விதம், மஞ்சும்மெல் பாய்ஸ் ஆகிய 4 படங்களும் தமிழ்நாட்டில் சக்கை போடு போடுகின்றன. இந்த படங்கள் ஒவ்வொன்றும் நூறு கோடிகளுக்கு மேல் வசூலில் சாதனை புரிந்தன. குறிப்பாக மஞ்சும்மெல் பாய்ஸ் 225 கோடி, ஆடுஜீவிதம் 150 கோடி, பிரேமலு 133 கோடி ரூபாய் என இதுவரை வசூலித்துள்ளது. இதுதவிர பிரமயுகம் என்ற மம்முட்டி படமும் 100 கோடியை கடந்துள்ளது.

இப்படி மலையாள படங்கள், தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜெயித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த படங்கள் எதுவுமே இல்லாமல் ரசிகர்கள் மிகவும் சோர்ந்து போயினர். இந்நிலையில் ஸம்மர் ஸ்பெஷல் ரி ரிலீஸ் படமாக 2004 ஆம் ஆண்டில் விஜய் நடித்து, மாஸ் மூவியாக பெரிய அளவில் வெற்றி பெற்ற கில்லி படம், இப்போது திரைக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

டைரக்டர் தரணி இயக்கத்தில், விஜய் திரிஷா பிரகாஷ்ராஜ் ஆசிஷ் வித்யார்த்தி, தாமு, கராத்தே ராஜா உள்ளிட்டோ நடித்த இந்த படம், கடந்த இரண்டு தினங்களாக ஹவுஸ்புல் காட்சிகளாக தமிழகம் முழுவதும் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த படத்துக்கு செல்லும் ரசிகர் கூட்டம், இந்த படத்தை ஆரவாரமாக கொண்டாடி வரவேற்று வருகின்றனர்.

வழக்கமாக விஜய் படம் களத்துக்கு வந்தாலே பதிலுக்கு அஜீத்குமாரும் ஏதேனும் ஒரு விதத்தில் தனது பங்களிப்பைச் செய்வார். கில்லி படத்துக்கு போட்டியாக அடுத்து நடிகர் அஜித்குமார் நடித்த மங்காத்தா படம் வரும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று, அஜித்குமார் பிறந்த நாள் என்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்திலும் அஜித்குமார் ஜோடியாக திரிஷா தான் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு தான், விஜய் இப்போது நடித்து உள்ள கோட் படத்தின் டைரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்