- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்து விஜய்யை நான் இயக்கினால்... அதில் இவர்கள் எல்லாம் நடிப்பார்கள்... கனவு திரைப்படம் குறித்து நெல்சனின்...

அடுத்து விஜய்யை நான் இயக்கினால்… அதில் இவர்கள் எல்லாம் நடிப்பார்கள்… கனவு திரைப்படம் குறித்து நெல்சனின் சுவாரசிய பதில்…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து நெல்சனுக்கு முதல் திரைப்படமாக கோலமாவு கோகிலா அமைந்தது. நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கு முன்னதாக அவர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்கி வந்தார்.

 

- Advertisement -

ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அந்த திரைப்படம் வெளியாகாமல் முடங்கி போனது. இதனிடையே கோலமாவு கோகிலா திரைப்படத்தை தொடர்ந்து, டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன். சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய முதல் திரைப்படமாக அது அமைந்தது.

 

- Advertisement -

இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றி அவருக்கு தளபதி விஜய் உடன் இணையும் வாய்ப்பு கொடுத்தது. ஆனால் இதை நெல்சன் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பீஸ்ட் என்னும் பெயரில் அவர் எடுத்த திரைப்படம், விமர்சன ரீதியாக பெருத்த அடியை கொடுத்தது. மேலும் சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கும் நெல்சன் ஆளானார்.

 

இதிலிருந்து வெளிவருவதற்கு அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட, அதற்கான சந்தர்ப்பம் ஜெயிலர் திரைப்படம் மூலம் கிடைத்தது. ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது. விமர்சன ரீதியாக அந்த திரைப்படம் அந்த அளவு பெரிதாக இல்லை என்றாலும், சிவராஜ்குமார் வரும் காட்சிகளும், ரஜினியின் ஸ்டைலும் படத்திற்கு எடுப்பாக இருந்ததால் வெற்றி பெற்றது.

 

இந்த நிலையில் நெல்சன் தனது அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பை இப்போது வரை வெளியிடாமல் இருக்கிறார். அவர் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் கவனம் செலுத்தி வருவதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நெல்சனிடம், நீங்கள் அடுத்ததாக விஜயை வைத்து யாரை எல்லாம் வைத்து எடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

 

இதற்கு பதில் கூறிய நெல்சன், தெலுங்கில் இருந்து மகேஷ்பாபு, மலையாளத்திலிருந்து மம்முட்டி, ஹிந்தியில் இருந்து ஷாருக்கான் ஆகியோரை வைத்து படம் எடுப்பேன் என்று தெரிவித்தார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்க வைப்பேன் என்றும் அவர் உறுதியாக கூறினார். இதனைக் கேட்ட ரசிகர்கள், ஜெயிலர் திரைப்படத்தின் பார்முலாவையே அவர் இதில் பின்பற்ற முயற்சிப்பதாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்