நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். குறிப்பாக 1990 களில் சின்னத்தம்பி படம் வெளியான போது, குஷ்பூவுக்கு கோவில் கட்டியதாக கூட ஒரு தகவல் உண்டு. எங்கு திரும்பினாலும் குஷ்பூ புராணமாகத்தான் அந்த காலகட்டத்தில் இருந்தது.
குஷ்பூ குஷ்பூ என்று ரசிகர்கள் அவரை கொண்டாடினார்கள். அதனால் தான் ரஜினிகாந்த் தனது அண்ணாமலை படத்தில், கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் குஷ்பூ குஷ்பூ என்று பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் குஷ்பூவுடன் ஜோடி சேர வேண்டும் என்று பல முன்னணி ஹீரோக்களே அதிக ஆர்வம் காட்டினார்கள் என்பதுதான் உண்மை.
இதில் அதிகளவில் நடிகை குஷ்பூவுடன் ஜோடி சேர்ந்தவர் இளைய திலகம் நடிகர் பிரபுதான். ஏறக்குறைய 15க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் ஜோடியாக நடித்திருக்கின்றனர். அந்த படங்களில் பலவும் பி வாசு இயக்கிய படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குஷ்பூ இந்தியில் இருந்து தமிழுக்கு வந்தவர். அவரது அறிமுகப்படம் தர்மத்தின் தலைவன். அந்த படத்தை தொடர்ந்து வருஷம் 16 என்ற படத்தில் நடித்தார்.
முதல் படத்தில் பிரபுவுடன், இரண்டாவது படத்தில் கார்த்திக்குடன் ஜோடியாக நடித்த அவர், தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த நிலையில், சின்னத்தம்பி படம் மிகப்பெரிய ஒரு வெற்றி வாய்ப்பை கொடுத்தது. அதன் பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், சரத்குமார், ஜெயராம் என பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்தார்.
இந்நிலையில் நடிகர் பிரபுவுக்கும் குஷ்பூக்கும் திருமணமானதாக ஒரு வதந்தி பரவி தமிழ் சினிமாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து டைரக்டர் சுந்தர் சியை குஷ்பூ காதலித்துதிருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குஷ்பூ தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற சுந்தர் சி, குஷ்பூ பற்றிய ஒரு ரகசியத்தை முதல்முறையாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். எங்கள் திருமணத்திற்கு முன், ஒரு டாக்டர் குஷ்பூவிடம் உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். இதனை கேட்டதும் குஷ்பூ, நீங்க வேற யாரையாவது திருமணம் செய்து கொள்ளுங்கள். என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று அழுதபடி என்னிடம் கூறினார் அந்த சமயத்தில் இருவரும் அந்த மனநிலையில் இருந்தோம். அதன்பின்பு கடவுள் ஆசீர்வாதத்துடன் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது, என்று சுந்தர் சி கூறியிருக்கிறார்.





