- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, ஜோதிகா சொன்ன அந்த பதில் - ஆவேசமடைந்த...

நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, ஜோதிகா சொன்ன அந்த பதில் – ஆவேசமடைந்த தளபதி ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இப்போதைக்கு ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் மிகப்பெரிய டாப் நடிகராக விஜய் இருக்கிறார். இன்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தனது சம்பளத்தில் 200 கோடி ரூபாயை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவ்வளவு முன்னிலையில் உச்ச நட்சத்திரமாக இருந்தும், நடிகர் விஜய் இப்போது சினிமாவை விட்டு முழுமையாக விலகி அரசியலில் ஈடுபட முடிவு செய்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி இருக்கும் அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியல் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

அடுத்து எச் வினோத் இயக்கத்தில், விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் படப்பிடிப்பு, விஜய் பிறந்த நாளான வருகிற ஜூன் 22ம் தேதி பிரசாத் ஸ்டுடியோவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடித்துவிடும் நடிகர் விஜய், 2025 ஆம் ஆண்டு முதல் முழு நேர அரசியல்வாதியாக, தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.

2026 ஆம் ஆண்டில் நடக்கும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராகவே விஜயின் முக்கிய திட்டமாக இருந்து வருகிறது. விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் விஜய்க்கு வாழ்த்து சொல்லி இருக்கின்றனர்.

- Advertisement -

திருமணத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கி விட்ட ஜோதிகா, அடுத்ததாக ஸ்ரீகாந்த் என்கிற இந்தி படத்தில் நடிக்கிறார். அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டத்தில் இன்று நடிகை ஜோதிகா கலந்து கொண்டார். இவர் நடிகர் விஜய்யுடன் குஷி, திருமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் அவுட் ஆப் த டாபிக் என்று முகத்தில் அடித்தால் போல் ஒரு பதிலை கூறினார். ஒரு பொதுவான, சினிமா சார்ந்த நபராக பேசாமல், அவுட் ஆப் த டாபிக் என்று எதிரியை போல ஜோதிகா பதில் சொல்லி இருப்பது விஜய் ரசிகர்களை பயங்கர கடுப்பேற்றி இருக்கிறது. இதன் மூலம் விஜய் மீது சிவக்குமார் குடும்பமே காழ்ப்புணர்ச்சியில் இருப்பது தெரிய வருகிறது. ஏனெனில் சூர்யா, விஜய் இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் வந்தாலும் விஜய் முன்னிலை பெற்றதே இந்த பொறாமைக்கு காரணமாக இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்