- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் அஜித்குமாரை நடிக்க வைத்த பிரபல இயக்குனர்; அப்செட் ஆன நடிகர் விஜய் -...

அந்த படத்தில் அஜித்குமாரை நடிக்க வைத்த பிரபல இயக்குனர்; அப்செட் ஆன நடிகர் விஜய் – கடைசி வரை அந்த டைரக்டரை நெருங்க விடாத தளபதி!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். நடிகர் விஜய் அஜித்குமார் இருவருமே சமகால கட்டத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள், துவக்கத்தில் அவர்களுக்குள் போட்டி இல்லை என்றாலும், ரசிகர்களே அவர்களை போட்டியாளர்களாக மாற்றிவிட்டனர். எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல் என்பதை போல, விஜய் அஜித் என்று ஒரு போட்டியை ரசிகர்களாகவே உருவாக்கி விட்டனர்.

தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டியாளர்களாகவே அவர்களை கருதி அவர்களுக்கான படங்களை தயாரிப்பது, கதைகளை அமைப்பது, படங்களை வெளியிடும் நாட்கள் என அவர்களுக்கும் மறைமுகமாக ஒரு போட்டியை உருவாக்கி விட்டனர். ஆனால் இதுவும் ஒரு விதத்தில் அஜித், விஜய்க்கு பெரிதாக உதவியது. ஏனெனில் இவர்களாக ஒரு போட்டியை உருவாக்கும் போது அதற்கேற்ற வகையில் படங்களின் வசூலும், எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்து, அதுவே அவர்கள் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் அறிமுகமான இவர், காதல் மற்றும் காமெடி கலந்த படங்களை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். நடிகை குஷ்புவின் கணவர் என்பதும் இவரது மிகப்பெரிய ஒரு அடையாளமாக இருக்கிறது. இவர் பல படங்களில் ஹீரோவாவும் நடித்துள்ளார். அவரது இயக்கத்தில் இப்போது அரண்மனை 4 படம் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் சுந்தர் சி கூறுகையில், நான் விஜயை ஹீரோவாக வைத்து, ஒரு படம் எடுக்க முடிவு செய்து அவரிடம் நேரில் சென்று பேசினேன். அப்போது அவரும் படத்தின் கதையை கேட்டுவிட்டு இந்த படத்தின் கண்டிப்பாக நான் நடிக்கிறேன். ஆனால் இப்போது மற்றொரு படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால், இந்த ஆண்டின் இறுதியில் இந்த படத்தின் துவங்கி விடலாம் என்று கூறினார்.

- Advertisement -

அந்த சமயத்தில் ஒருமுறை நடிகர் அஜித்குமார் என்னை நேரில் சந்தித்து, நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக நான் விஜய்க்கு ஆண்டு இறுதியில் தானே படம் எடுக்க போகிறோம். அதற்குள் அஜித் நடிக்கும் படத்தை எடுத்துவிடலாம் என்று முடிவு செய்தேன். அந்த நேரத்தில் என் கைவசம் இருந்த விஜய் கதையையே அஜித் கதாநாயகனாக போட்டு, விஜய் நடிக்க வேண்டிய கேரக்டரில் அஜித்தை நடிக்க வைத்தேன். அந்த படம் தான் உன்னை தேடி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதற்கு பிறகு விஜயுடன் நான் செய்ய வேண்டிய படம் தள்ளிப்போனது. நானும் விஜயும் சேர்ந்து படம் பண்ண முடியவில்லை. மூன்று முறை முயற்சிகள் நடந்தும் கடைசி வரை, எனது இயக்கத்தில் விஜய் நடிக்கவே இல்லை என்று சமீபத்தில் அந்த நேர்காணலில் ஓப்பனாக கூறி இருக்கிறார் சுந்தர் சி. விஜய் நடிக்க வேண்டிய படத்தில், அவரது கேரக்டரில் அஜித்குமாரை நடிக்க வைத்தால், விஜய் எப்படி உங்கள் படத்தில் மீண்டும் நடிக்க சம்மதிப்பார் என்று விஜய் ரசிகர்கள் கோபமாக, டைரக்டர் சுந்தர் சியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்

- Advertisement -

சற்று முன்