- Advertisement -
Homeபொழுதுபோக்குரோட்டில் நடந்த தகராறு, கார் ஓனரை அடித்து துவைத்த நடிகர் ரஜினிகாந்த் - நெல்லூரில் நடந்த...

ரோட்டில் நடந்த தகராறு, கார் ஓனரை அடித்து துவைத்த நடிகர் ரஜினிகாந்த் – நெல்லூரில் நடந்த உண்மை சம்பவத்தை சொன்ன பிரபல நடிகர்!

- Advertisement -

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் மோகன்பாபு. நடிகர் ரஜினிகாந்தின் மிகவும் நெருக்கமான சினிமா நண்பர்களில் ஒருவர். இந்த வயதிலும் இன்றும் வாடா போடா என்று உரிமையாக பேசிக்கொள்ளும் அளவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருவரும் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில், நடிகர் ரஜினிகாந்துடன் மோகன்பாபுவும் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மோகன்பாபு ஒரு நேர்காணலில் பேசியபோது கூறியதாவது, இந்த சம்பவம் 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. நெல்லூரில் ஒரு படப்பிடிப்பு நடந்தது. அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஈவ்னிங் 6 மணிக்கு கம்பெனி காரில் நானும் ரஜினியும் போய்க்கொண்டு இருக்கிறோம்.

- Advertisement -

நாங்கள் செல்வது ஒரு வழிப்பாதை. அங்கே வழியில் ஒரு சண்டை நடக்குது. கார்காரன் ஒருவனுக்கும் மாட்டுவண்டிக்காரனுக்கும் சண்டையா இருக்குது. நான் காரில் இருந்து இறங்கி பார்த்து என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு இருக்கறேன். கார் போயிட்டு இருக்கும் போது எதிர்ல மாட்டு வண்டி வந்துருக்குது.அப்போ கார் போறதுக்கு மாட்டுவண்டிக்காரன் இடம் கொடுக்கலேன்னு சொல்லிட்டு அந்த கார் ஓனர் மாட்டு வண்டிக்காரனை போட்டு அடிச்சிட்டான்.

இதை கேட்டுட்டு பின்னால் இருந்து வந்த ரஜினி, அந்த கார் ஓனரை போட்டு தடதடதடன்னு அடி அடின்னு அடிச்சிட்டான். அப்போ நான் பயந்துட்டு என்னடா என்னடா இதுன்னு நான் கேட்டால், டேய் என்னடா அவனுக்கு அவ்வளவு திமிரு? கார் இருக்குதுன்னு அவ்வளவு திமிரா? அவன் ஏழைன்னு வண்டிக்காரனை போய் அடிக்கிறானா? என்னய்யா உன் திமிரை உன்கிட்ட வெச்சுக்கோ அப்படீன்னு அவனை பார்த்து சத்தம் போட்டான்.

- Advertisement -

எனக்கு ரொம்பவும் பயமாகி போச்சு. என்னடா இப்படி பண்ணிட்டானே? காலையில் என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையேன்னு நானும் இருந்துட்டேன். காலையில் ஊரே திரண்டு வந்துடுச்சு. அவங்களை எல்லாம் சமாதானம் பேசி அமைதியாக்கி, அவன் கொஞ்சம் கோபக்காரன். தெரியாம அடிச்சிட்டான் என்று பேசி அவங்களை எல்லாம் நான் சமாளித்தேன்.

பார்த்தீங்களா, அப்பவே அவன் ஏழைன்னு யாரையாவது கேவலமா பேசினால் ரஜினி பொறுத்துக்க மாட்டான். பணம் இருந்தா அது உன்கிட்ட இருக்கட்டுமய்யா, அதுக்காக ஏழையை ஏன் கேவலமா நினைக்கறே? கிண்டல் பண்றே?ன்னு கோபப்படற நல்ல குணம் கொண்டவன் என் நண்பன் ரஜினிகாந்த் என்று அந்த நேர்காணலில் நடிகர் மோகன்பாபு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்