ஆரம்பத்தில் விஜய் டிவியில் காம்பியராக இருந்து பிறகு மெரினா படம் மூலம் நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் தாய்கிழவி இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் உடன் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, ஸ்கூலில் படிக்கும் போதெல்லாம் நான் நோட்புக்கில் சிவகார்த்திகேயன் ஐபிஎஸ் என்றுதான் எழுதி வைத்திருப்பேன். எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என்றுதான் ஆசை.
என்னோட அப்பா போலீஸ் ஆபிஸர். அதை பார்த்து பார்த்து எனக்கும் போலீஸ் ஆகணும்ங்கற ஆசை இருந்தது. ஆனா அப்பா கீழே லெவல்ல ஜாயிண்ட் பண்ணி அப்புறம் பிரமோசன் வாங்கி வாங்கி எஸ்பி ஆனவங்க. நான் நேரடியா ஐபிஎஸ் படிச்சிட்டு வரணும். அவங்களை விட பெரிய போஸ்ட்டிங்குல இருக்கணும் என்று ஆசைப்பட்டாங்க.
இதைப்பத்தி நானும் அப்பாவும் பேசிக்கிட்டது கிடையாது. ஆனால் 2 பேருக்கும் ஒரு புரிதல் உண்டு. அப்பா இறந்ததுக்கு அப்புறம் என் கணவரை நான் இழந்துட்டேன். என் பையனையும் இதுல விடமாட்டேன்னு அம்மா அப்புறம் மைண்ட் மாறிட்டாங்க. போலீஸ் வேலைக்கு நான் போகலே.
அதுக்கு அப்புறம் எந்த ஐடியாவுமே இல்லாமல் தான் சுத்தீட்டு இருந்தேன். படிப்பும் நான் சரியாக படிக்கலே படிப்புல நான் 80 பர்சன்டேஜ் வாங்குவேன் என்றார். அப்போது அருகில் இருந்த நடிகர் அர்ஜூன், என்னது? 80 பர்சன்டேஜ் நல்ல மார்க் இல்லையா? நான் எல்லாம் 35 40 36ன்னு மார்க் வாங்கி ஜஸ்ட் பாஸ் தான் பண்ணியிருக்கேன் என்று ஆச்சரியமாக கூறினார்.
அதற்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன், அப்படி நான் வாங்கியிருந்தால் என்னை வீட்ல சுட்டிருப்பாங்க சார். ஏனென்றால் என் அக்கா 95 பர்சன்டேஜ் 96 பர்சன்டேஜ் மார்க் வாங்குவாங்க. அப்படி பார்த்தா நான் 16 பர்சன்டேஜ் மார்க் கம்மிதான் என்று ஜாலியாக சிவகார்த்திகேயன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





