- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் திரைப்படம் இப்படித்தான் இருக்கப் போகுது... புதிய தகவல்களை பகிர்ந்த தெலுங்கு நடிகர் ராணா...

வேட்டையன் திரைப்படம் இப்படித்தான் இருக்கப் போகுது… புதிய தகவல்களை பகிர்ந்த தெலுங்கு நடிகர் ராணா…

- Advertisement -

ரஜினிகாந்த் தற்போது முழு வீச்சாக வேட்டையன் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஜெய் பீம் திரைப்படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஞானவேல்தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் காரணமாக வேட்டையன் திரைப்படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

அது மட்டுமல்லாமல், படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் நடிகைகள் தேர்வும் வேட்டையன் திரைப்படம் பற்றி பலரும் பேசுவதற்கு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. பாலிவுட் உலகின் உச்ச நட்சத்திரமான, அமிதாப் பச்சன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

 

இது மட்டுமல்ல மலையாள உலகின் நடிப்பு அரக்கனான பகத் பாசிலுக்கு இந்த படத்தில் காமெடி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நடிகை மஞ்சு வாரியரும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார். இதுபோக தெலுங்கு நடிகர் ராணா, நடிகைகள் துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் ஆரம்பித்தது. பிறகு திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, புதுச்சேரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்ட நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு மும்பை சென்றுள்ளது.

 

பள்ளிக் கல்வித் துறையில் ஏற்படும் ஊழலை வைத்து தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் இதற்கான பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது, ரஜினியுடன் இசையமைப்பாளர் அனிருத் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகின. இந்தத் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

படத்தில் ரானா வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வேட்டையன் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். சூப்பர் ஸ்டாருடன் இந்த திரைப்படத்தில் நான் பணியாற்றுவது வியப்பானது. எந்த ஒரு ரஜினி படத்திலும் இல்லாத கதையாக இது இருக்கும். இது நீதித்துறை காவல்துறை சம்பந்தப்பட்ட திரைப்படம். இது நல்ல ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்ட கதை என்று தான் நான் கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

 

சற்று முன்