- Advertisement -
Homeபொழுதுபோக்குபோக்சோ வழக்கில் கைதான குற்றவாளி நான் இல்லை… - கண்ணாத்தாள் பட இயக்குனர் பாரதி கண்ணன்...

போக்சோ வழக்கில் கைதான குற்றவாளி நான் இல்லை… – கண்ணாத்தாள் பட இயக்குனர் பாரதி கண்ணன் வெளியிட்ட வீடியோ!

- Advertisement -

நடிகர் வடிவேலு சூணா பாணா என்ற கேரக்டரில் கண்ணாத்தாள் என்ற படத்தில் நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் தன் காதலி சாந்திக்காக ஒரு காதலர் மதுவில் விஷம் கலந்து குடிக்க தயாராக இருப்பார். அப்போது அவரிடம் இருந்து அந்த மது கிளாஸை பிடுங்கி வடிவேலு குடித்து விடுவார். அவர்தான் அந்த படத்தின் இயக்குனர் பாரதி கண்ணன். அவரே அந்த காமெடி காட்சியில் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்தார். இது பெரிய அளவில் வரவேற்பை பெற்ற காமெடி காட்சியாக இன்றுவரை உள்ளது.

அதே போல் சதுரங்கவேட்டை படத்தில் பாதி விலைக்கு தங்கம் என்று மோசடி நடக்கும். அந்தக் காட்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்து முறைப்படி வா முறைப்படி போ எதா இருந்தாலும் முறைப்படி நடக்கணும்யா என்று டயலாக் பேசி ரசிகர்களை கவர்ந்தவரும் பாரதி கண்ணன்தான். இதுதவிர எதிர்நீச்சல் மருமகளே வா போன்ற டிவி சீரியல்களிலும் அவர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் பாரதி கண்ணன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் அருவா வேலு கண்ணாத்தாள் திருநெல்வேலி பன்னாரி அம்மன் கரகாட்டக்காரி என 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளேன். சமீபத்தில் பாரதி கண்ணன் என்ற துணை நடிகர் பாலியல் வழக்கில் போக்‌ஷோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் சிலர் பெயரை தவறாக புரிந்து அந்த வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி என் புகைப்படத்தை அதில் பயன்படுத்தி உள்ளனர். நான் வேறு. அந்த பாரதி கண்ணன் வேறு. எனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதால் என் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். என் மீது இதுவரை எந்த அவதூறும் வந்ததில்லை. எந்த வம்பு வழக்குக்கும் நான் சென்றதில்லை. நான் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

- Advertisement -

அந்த பாலியல் வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே பாலியல் வழக்கில் கைதான பாரதி கண்ணன் நான் இல்லை. மக்கள் தவறாக என்னை நினைத்து விடக்கூடாது என்று அந்த வீடியோவில் பாரதி கண்ணன் கூறியிருக்கிறார். சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சமீபத்தில் அதிரடியாக சோதனை நடத்தி பெண்களை மீட்டனர்.

அந்த வழக்கில் கைதானவர் பெயர் பாரதி கண்ணன். அவரும் சினிமாவில் துணை நடிகர் என்று கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கண்ணாத்தாள் பட இயக்குனர் நடிகர் பாரதி கண்ணன் கைது என தவறான தகவல் பரவியதால் அவர் இந்த வீடியோவை வெளியிட்டு விளக்கம் தந்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்