- Advertisement -
Homeபொழுதுபோக்குலைகா புரடக்சன் சுபாஷ்கரனிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய நடிகர் அஜீத்குமார் - பரபரப்பு பின்னணியில்...

லைகா புரடக்சன் சுபாஷ்கரனிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய நடிகர் அஜீத்குமார் – பரபரப்பு பின்னணியில் நடந்தது என்ன?

- Advertisement -

நடிகர் அஜித்குமார், சமீபமாக நடித்து வந்த படம் விடாமுயற்சி. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடித்து வந்தார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தரப்பில் நிதியாதார பிரச்னைகள் தான் படத்தை சரியாக கொண்டு போக முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் படம் நடந்த சூட்டிங் ஸ்பாட் லொகேஷனும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர். விடாமுயற்சி படப்பிடிப்பு நடத்தப்பட்ட அஜர்பைஜானில் தொடர்ந்து இயற்கை சீற்றங்கள் இருந்தது. அடிக்கடி மழைப்பொழிவு, கனமழை, கடும்குளிர், மணல் புயல் போன்ற காரணங்களால் அங்கு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

அஜர்பைஜானில் நான்கு மாதங்கள் மட்டுமே விட்டு விட்டு படப்பிடிப்பு நடந்த நிலையில், இன்னும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாக்கியுள்ளன. ஆனால் இப்போதைக்கு மீண்டும் அந்த படத்தை துவங்குவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை . இந்த சூழலில் விடாமுயற்சி படம் மீண்டும் துவங்குமா துவங்காதா என்று அஜீத்குமார் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரஜினி நடித்த வேட்டையன் படம், கமல் நடிப்பில் இந்தியன் 2, இந்தியன் 3, பிறகு ராம் சரண் நடித்த கேம்சேஞ்சர் போன்ற படங்களும் கையிருப்பில் இருப்பதால் விடாமுயற்சி படத்தை அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. அக்டோபர் மாதம் துவங்கி ஏறக்குறைய 7 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் விடாமுயற்சி படம் அப்படியே அந்தரத்தில் தொங்குகிறது.

இந்த சூழ்நிலையில் அடுத்ததாக ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தற்போது தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் நடிகர் அஜித்குமார் சில விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அஜீத்குமாரிடம் சுபாஷ்கரனிடம் பேசிய போது, விடாமுயற்சி படப்பிடிப்புக்கு எல்லாம் தயாரான பிறகு, நாளை நான் ஸ்பாட்டுக்கு போனால் ஷூட்டிங் நடக்கும் என்ற ஒரு சூழ்நிலை இருந்தால் மட்டும் என்னை படப்பிடிப்புக்கு அழையுங்கள். நான் வந்து விடுகிறேன். எந்தவித ஏற்பாடுகளும் செய்யாமல் என்னை அழைக்க வேண்டாம். என்னை டிஸ்டர்ப் பண்ணாதீர்கள். நான் குட்பேட் அக்லி படத்தில் நடிக்க போகிறேன், என்று வெளிப்படையாக சுபாஷ்கரனிடம் பேசியிருக்கிறார். அதற்கு அவர் சம்மதித்த நிலையில் வரும் 10ம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க அஜீத்குமார் ஆயத்தமாகி வருகிறார்.

சற்று முன்