- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் திரைப்படத்தில் 'அடுத்த விஜய்' எனக் கூறப்படும் நடிகர் இருக்கிறாரா!... இன்னும் என்னென்ன சர்ப்ரைஸை எல்லாம்...

கோட் திரைப்படத்தில் ‘அடுத்த விஜய்’ எனக் கூறப்படும் நடிகர் இருக்கிறாரா!… இன்னும் என்னென்ன சர்ப்ரைஸை எல்லாம் வெங்கட் பிரபு வச்சிருக்காரோ…

- Advertisement -

லியோ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக கோட் படத்தில் நடித்து வருகிறார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பதை சுருக்கியே கோட் என்று ரசிகர்களை அழைக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.

 

- Advertisement -

இதில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், பிரேம்ஜி அமரன், வைபவ், இவானா, வி டிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். டைம் ட்ராவலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

 

- Advertisement -

இந்தத் திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரிலும், இரண்டு விஜய் கதாபாத்திரங்கள் இடம்பெற்று இருந்தன. இதில் ஒரு விஜய்யை மிகவும் இளமையான தோற்றத்தில் காட்டுவதற்காக, நியூயார்க் நகரில் ஏஐ தொழில்நுட்பத்தைநாடி இருக்கிறார்கள்.

 

கிட்டத்தட்ட இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போது ரஷ்யாவில் ஷூட்டிங் நடத்தி வருகிறார்கள். இதற்கு முன்பாக சென்னை, தாய்லாந்து, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மிகப் பெரும் அளவில் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

 

சமீபத்தில் இந்த திரைப்படத்திலிருந்து விசில் போடு பாடல் வெளியானது. ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை தவறவில்லை. யுவன் இசையும் மிக சுமாராகவே இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இதனிடையே படத்தில் வேறு ஒரு பாடலுக்கு திரிஷா நடனம் ஆடி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

இதுபோக, கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது. வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே அவர் வருவார் என்று சொல்லப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், வெங்கட் பிரபு அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியத்துடன் கூறி வருகின்றனர். கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

- Advertisement -

சற்று முன்