- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜயின் சிறப்பு அதிகாரியாக நியமனம், ஒரே நாளில் பதவி நியமனம் ரத்து - யார்...

முதல்வர் விஜயின் சிறப்பு அதிகாரியாக நியமனம், ஒரே நாளில் பதவி நியமனம் ரத்து – யார் இந்த ரிக்கி ராதன் பண்டித் வெற்றிவேல்? பகீர் கிளப்பும் பின்னணி!

- Advertisement -

தமிழக முதல்வர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டித் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். ஜோதிடருக்கு அரசு பதவியா? என்று மக்கள் மத்தியிலும் சட்டசபையிலும் எதிர்ப்பு வலுத்தது. இதையடுத்து பதவி நியமனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த ஜோதிடரின் அரசு அதிகாரி நியமன உத்தரவை தவெக அரசு வாபஸ் பெற்று விட்டது.

ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்த வெற்றிவேல், இப்போது ரிக்கி ராதன் பண்டித் வெற்றிவேல் என மாறிவிட்டார். தவெக கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் விஜயின் ஜோதிட ஆலோசராகவும் இருக்கும் வெற்றிவேல், இதற்கு முன்பு ஜெயலலிதா அத்வானி போன்ற அரசியல் பிரமுகர்களுக்கு ஜோதிடம் மற்றும் ஆன்மீக ஆலோசராக இருந்தவர்.

- Advertisement -

ஈரோடு மாவட்டத்தில் அரச்சலூர் அருகே உள்ள அவல் பூந்துறை தான் அவரது சொந்த ஊர். திருப்பூரில் பிரிண்டிங் பிரஸ் நடத்தினார். வெற்றிவேலுக்கும் ஆனந்திக்கும் திருமணம் நடந்து இருவரும் நம்பியூரில் வாழ்ந்தனர். ஆனந்தி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற அவரது தங்கை ராஜலட்சுமிக்கும் வெற்றிவேலுவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. மனைவி ஆனந்தி இதை கண்டித்தார். இதனால் ராஜலட்சுமியும் வெற்றிவேலும் சேர்ந்து பிரிண்டிங் பிரஸ்க்கு பயன்படுத்தும் கோந்து போன்ற பசையை கொடுத்து ஆனந்தியை கொன்றதாக கூறப்படுகிறது.

கடந்த 1994ம் ஆண்டில் மனைவி கொலை வழக்கில் கைதான வெற்றிவேல், ஆனந்தி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை திசை திருப்பிவிட்டு விடுதலை ஆகியிருக்கிறார். ராஜலட்சுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி 2 பிள்ளைகளும் பிறந்தன. இந்நிலையில் ஆனந்தி ராஜலட்சுமி கதையை மறைத்து விட்டு வெற்றிவேல், சுமதிஸ்ரீ என்பவரை 2வது திருமணம் செய்தார். தனது மனைவியுடன் ஊத்துக்குளியில் வாழ்ந்திருக்கிறார். அப்போது சுமதி ஸ்ரீயின் நகைகளை விற்று குடும்பத்தை நடத்தியிருக்கிறார்.

- Advertisement -

வருமானம் போதாமல் பகுதிநேர தொழிலாக ஜோதிடமும் பார்த்திருக்கிறார். வெற்றிவேல் சொன்ன ஜோதிடம் பலருக்கும் சாதகமாக அமைந்ததால் பலர் அவரை தேடி வந்திருக்கின்றனர். பிறகு பிரிண்டிங் பிரஸ் தொழிலை விட்டு விட்டு ஈரோட்டில் ஜோதிட நிலையம் அமைத்த அவர் தனது பெயரை பண்டித் வெற்றிவேல் என்றும் மாற்றியிருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் ராஜலட்சுமி தனது கணவரை பிரிந்து பிள்ளைகளோடு வந்து வெற்றிவேலை சந்திக்க அவரை தனி வீடு எடுத்துக் கொடுத்து தங்க வைத்திருக்கிறார் வெற்றிவேல். பிறகு சென்னைக்கு ராஜலட்சுமியை அழைத்து வந்த வெற்றிவேல், தனது 2வது மனைவி சுமதிஸ்ரீயை விவாகரத்து செய்து இப்போதும் ராஜலட்சுமியுடன் குடித்தனம் நடத்தி வருகிறார். அப்போதைய அதிமுக அமைச்சர் ஈரோடு முத்துசாமிக்கு ஜோதிடம் பார்த்து போயஸ்கார்டனுக்குள் சென்ற அவர் இப்போது விஜய்க்கும் ஜோதிடராக மாறினார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்