- Advertisement -
Homeபொழுதுபோக்குகேட்காமல் மரியாதை தேடி வருவது சூப்பர் ஸ்டாருக்கு மட்டும்தான், ரஜினிக்கு திடீரென கிடைத்த கௌரவ பரிசு,...

கேட்காமல் மரியாதை தேடி வருவது சூப்பர் ஸ்டாருக்கு மட்டும்தான், ரஜினிக்கு திடீரென கிடைத்த கௌரவ பரிசு, – போடு வெடிய, ரசிகர்கள் உற்சாகம்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 45 ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இதுவரை 169 படங்களில் ரஜினிகாந்த் நடித்து முடித்திருக்கிறார். அவர் நடித்த படங்கள் மாறி மாறி ஜெயித்தாலும் தோற்றாலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு அவர் மட்டுமே, சொந்தக்காரராக இருந்து வருகிறார்.

இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படம், வேட்டையன் படப்பிடிப்பை முடித்து விட்டார். இதையடுத்து தனது 171வது படம் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்கிறார். கூலி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் துவங்க இருக்கிறது.

- Advertisement -

ரஜினிகாந்த், கடந்த 1977ம் ஆண்டில் கே பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார். அவருக்கு அப்போது வயது 27. இப்போது அவருக்கு வயது 73. துவக்கத்தில் சில படங்களில் வில்லனாகவும், சிறு கதாபாத்திரங்களிலும் நடித்த ரஜினியை, பைரவி படம் மூலம் ஹீரோவாக மாற்றியவர் கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானம். இது நம்ம ஆளு படத்தில், பாக்யராஜை பூணூல் போட்டுக்கொண்டு சுண்டல் விற்க சொல்லும் பிராமணராக நடித்திருந்தவர்தான் கலைஞானம் என்பது குறிப்பிடத்தக்கது.

பைரவி படத்தின் வெற்றிக்கு பிறகு, கே பாலசந்தர் படங்களில் கமலுடன் நடித்து, பிறகு தனியாக நடித்து படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நட்சத்திரமாக 73 வயதிலும் ஜொலிக்கிறார். இப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினிகாந்த், கூலி படம் ஷூட்டிங் துவங்கும் முன் ஓய்வுக்காக இப்போது அபுதாபி சென்றிருக்கிறார் ரஜினிகாந்த்.

- Advertisement -

அங்கு ஐக்கிய அரபு அமீரகம் அரசு, நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. இந்த கோல்டன் விசா மூலம் 10 ஆண்டுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் யுஏஇ நாடுகளின் குடிமகனாக கருதப்படுவார். இந்த கெளரவம் வழங்கிய ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும், நண்பர் லுாலு குரூப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் யூசப் அலிக்கும் நன்றி தெரிவித்து, அவர் இல்லாமல் தனக்கு இந்த கௌரவம் கிடைத்திருக்காது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பல துறை சார்ந்த வல்லுனர்களுக்கு, குறிப்பாக சினிமா நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசா வழங்கி யுஏஇ கௌரவப்படுத்துகிறது. அந்த வரிசையில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், விக்ரம், பார்த்திபன், சிம்பு, யுவன் ஷங்கர் ராஜா, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, திரிஷா, மீனா உள்ளிட்டோர் ஏற்கனவே கோல்டன் விசா பெற்றிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்