- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவின் கங்குவா படத்தைப் பார்த்த அஜித்குமார்... சிறுத்தை சிவாவிடம் என்ன சொன்னார் தெரியுமா...

சூர்யாவின் கங்குவா படத்தைப் பார்த்த அஜித்குமார்… சிறுத்தை சிவாவிடம் என்ன சொன்னார் தெரியுமா…

- Advertisement -

சிறுத்தை சிவா உடன் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என நான்கு திரைப்படங்களில் பணிபுரிந்து இருக்கிறார் அஜித்குமார். இதில் வீரம் வேதாளம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்றன. என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சிறுத்தை சிவா உடன் இணைந்து விவேகம் திரைப்படத்தில் அஜித் நடித்தார்.

 

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால், அஜித் ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் சிறுத்தை சிவாவின் மேல் நம்பிக்கை வைத்து தனது அடுத்த திரைப்படத்தையும் அவருக்கே அஜித் கொடுத்தார். இப்படித்தான் விசுவாசம் திரைப்படம் தயாரானது.

 

கிராமத்து பின்னணியில் தந்தை மகளுக்கு இடையேயான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அது மட்டுமல்லாமல் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறி வசூல் மழை பொழிந்தது.

 

இந்த நிலையில் சிறுத்தை சிவா அடுத்ததாக, அண்ணாத்த திரைப்படத்தை எடுத்து படுதோல்வியை சந்திக்க, தற்போது சூர்யாவை வைத்து கங்குவா படத்தை எடுத்து முடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இதன் படப்பிடிப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது. மறுபிறவி கான்செப்ட் மையமாக வைத்து இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா எடுத்து இருக்கிறார்.

 

இதில் ஃப்ளாஷ்பாக்கில் வரும் சூர்யாவின் காட்சிகளுக்காக படக்குழு நிறையவே மெனக்கெட்டு இருக்கிறது. பெரும் பொருட்செலவில் இந்த படத்தின் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதாணி நடித்திருக்கிறார். யோகி பாபு கோவை சரளா நட்டி ஜெகபதிபாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்திருக்கிறது.

 

இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கங்குவா படத்தில் சில காட்சிகளை அஜித்குமார் பார்த்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைந்த அஜித்குமார் சிறுத்தை சிவாவை பாராட்டி இருக்கிறாராம். அப்போது சிறுத்தை சிவா, அடுத்த படத்திற்கான கதையையும் கூறி இருப்பதாகவும், குட் பேட் அக்லிக்கு பிறகு அவருடன் அஜித் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சற்று முன்