நடிகர் ரவிமோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருக்கிறார். சமீபத்தில் அவர் தனது ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் கடந்தாண்டில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நடிகர் ரவி மோகன், சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கு விசாரணை இப்போது கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே நடிகர் ரவிமோகன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். எப்போதும் அவர்கள் இருவரும் ஒன்றாகவே காணப்படுகின்றனர். கோவில்கள் திருமண நிகழ்ச்சிகள் சினிமா விழாக்களில் இருவரும் தம்பதி போல ஒன்றாக கைகோர்த்து வந்து செல்கின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் ரவிமோகன் நடித்த படங்கள் எதுவும் சரியான வரவேற்பை பெறவில்லை. அகிலன் இறைவன் சைரன் 108 காதலிக்க நேரமில்லை பிரதர் என நடிகர் ரவிமோகன் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. அடுத்தாக ஜீனி கராத்தேபாபு உள்ளிட்ட அவரது படங்கள் வெளிவர இருக்கின்றன.
இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தில் முதன் முறையாக நடிகர் ரவி மோகன் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள பென்ஸ் என்ற படத்திலும் வில்லனாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். சில தினங்களுக்கு முன் நடிகர் ரவிமோகன், புதிதாக சொந்த தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார்.
ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்ற இந்த நிறுவனத்தின் துவக்க விழாவில் அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்துக்கொண்டனர். ஆனால் அவரது அப்பா எடிட்டர் மோகன் மட்டும் பங்கேற்கவில்லை. அவர் சொந்த பணிகள் காரணமாக வரவில்லை என்று சொல்லப்பட்டாலும் அதைவிட சில முக்கிய காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஆர்த்தியை பிரிந்த மகன் ரவி, பாடகி கெனிஷாவுடன் நெருக்கமான நட்பில் இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை. மேலும் தோல்வி படங்களை தந்து வரும் மகன் ரவி, இப்போது சொந்த தயாரிப்பு நிறுவனம் துவங்கிய மட்டுமின்றி இதற்காக பல அரசியல் புள்ளிகளிடமும் பெரிய அளவில் கடன் வாங்கி வருகிறார். இது எதிர்காலத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் இருப்பதால் அந்த கோபத்தில்தான் அவர் இந்த விழாவுக்கு வரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.





