- Advertisement -
Homeபொழுதுபோக்குகே.ஜி.எஃப் இயக்குனரை நேரில் சந்தித்த அஜித்குமார், சர்ப்ரைஸுக்கு தயாரா?

கே.ஜி.எஃப் இயக்குனரை நேரில் சந்தித்த அஜித்குமார், சர்ப்ரைஸுக்கு தயாரா?

- Advertisement -

அஜித்குமார் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க உள்ளது ரசிகர்கள் பலரும் அறிந்ததே. இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்திற்கான அறிவிப்பு கடந்த மே மாதம் அஜித் பிறந்த நாள் அன்று வெளியானது. ஆனால் இப்போது வரை இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆதலால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதால் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தாமதம் ஆவதாக ஒரு பக்கம் செய்திகள் வர, இன்னொரு பக்கம் இத்திரைப்படத்தை சிறப்பான முறையில் உருவாக்குவதற்காக இயக்குனர் மகிழ் திருமேனி மிகவும் உன்னிப்பாக திரைக்கதையை அமைத்து வருகிறார் என்றும் கூறுகின்றனர். இவ்வாறு படப்பிடிப்பு தாமதமாவது குறித்து தகவல்கள் வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தற்போது ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அஜித்குமார் “கேஜிஎஃப்” இயக்குனர் பிரசாந்த் நீல்-ஐ நேரில் அழைத்து “நாம் ஒரு படம் பண்ணலாமா?” என கேட்டிருக்கிறார். அஜித்தே இவ்வாறு கேட்டதும் பிரசாந்த் நீலுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லையாம்.

“இப்போது சலார் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளேன். ஆதலால் அதற்கு அடுத்த புராஜெக்ட்டில் நிச்சயமாக உங்களுக்கான கதையுடன் வருகிறேன். நீங்கள் Free-ஆக இருந்தால் நிச்சயம் படம் பண்ணலாம்” என பிரசாந்த் நீல் கூறியிருக்கிறாராம். ஆதலால் நிச்சயம் அஜித்குமார்-பிரசாந்த் நீல் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்