நடிகர் சித்தார்த், துவக்கத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிசெய்தவர். பிறகு, ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். இளம் வயதினர் வாழ்வியலை படம் பிடித்து காட்டிய இந்த கதையில் சித்தார்த் பிரதான ஹீரோ. பரத், நகுல், மணிகண்டன் மற்றும் தமன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஜெனிலியா நடிப்பு, அதிக பாராட்டைப் பெற்றது.
தொடர்ந்து ஆயுத எழுத்து, உதயம் என்எச் 4, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்த சித்தார்த், பெரிய அளவில் தமிழ் சினிமாவில் முன்னணிக்கு வர முடியவில்லை. எனினும் அவர் கடந்தாண்டில் நடித்து வெளிவந்த சித்தா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இளம் சிறுமிகள், பாலியல் துன்புறுத்தலில் சிக்கிக் கொள்வதை யதார்த்தமான கதையில், டைரக்டர் அருண்குமார் தந்திருந்தார். இவர் பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தார்த் நடிப்பில் சித்தா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதைப்படி, சித்தார்த் சமுதாயத்தில் நடிக்கும் அநீதிகளை, குற்றச் சம்பவங்களை, லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை வீடியோவாக எடுத்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார். அதனால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து, இந்தியன் தாத்தா சித்தார்த்தை காப்பாற்றுகிறார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்தியன் 2 படத்தில் நடித்த பிறகு சித்தார்த்தின் போக்கே மாறிவிட்டது என்று படப்பிடிப்பு குழுவினர் புகார் கூறுகின்றனர். அவரது பழக்கவழக்கங்களே முற்றிலும் மாறிப் போய் விட்டதாகவும், இந்தியன் 2 பிரமோசன் நிகழ்ச்சிகளில் கூட, கமலுக்கு தரக்கூடிய முக்கியத்துவம், தனக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்கும் நிலையில், திடீரென வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் சித்தார்த். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு வருவாரா, மாட்டாரா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த்தை அறிமுகப்படுத்தியதே ஷங்கர்தான், அவர் இயக்கும் படத்தில் நடித்துவிட்டா இத்தனை அலப்பரை செய்வது என பலரும், சித்தார்த்தை திட்டி வருகின்றனர்.





