ஆரம்பத்தில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த சிவகார்த்திகேயன், கொஞ்சம் கொஞ்சமாக தனது பாணியை மாற்றினார். ஆக்சன் கலந்த கதைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த அவர், குடும்ப ஆடியன்ஸ்களின் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். கடைசியாக அவர் நடித்த மாவீரன் திரைப்படமும் சோதனை முயற்சியாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.
தற்போது முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த திரைப்படமாக அமரனில் அவர் நடித்திருக்கிறார். ராணுவ பின்னணியில் இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை தான் இந்த திரைப்படம் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.
இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அமரன் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக தனது 23 வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தளபதி விஜயை வைத்து துப்பாக்கி கத்தி என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் தான் இதன் இயக்குனர். தெலுங்கின் முன்னணி நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு, கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் ருக்மணி வசந்த். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கல்லூரி மாணவர் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இதன் சூட்டிங் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ ஆர் முருகதாஸ் இந்த திரைப்படத்திற்கு பிறகு சல்மான் கானுடன் இணைகிறார்.
இதற்கு சிக்கந்தர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் முருகதாஸ். தற்போது சிவகார்த்திகேயன் படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு அவர் சிக்கந்தர் ஷூட்டிங் செல்கிறார். இப்படியான சூழலில் ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தில் சல்மான்கான் ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏ ஆர் முருகதாஸ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சல்மான் கான் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.





