- Advertisement -
Homeபொழுதுபோக்குகப்பு முக்கியம் பிகிலு… வசனத்தை அரசியலிலும் மறக்காத நடிகர் விஜய், அடுத்து அவர் செய்யப் போகும்...

கப்பு முக்கியம் பிகிலு… வசனத்தை அரசியலிலும் மறக்காத நடிகர் விஜய், அடுத்து அவர் செய்யப் போகும் தரமான சம்பவம், பிளான் இதுவா? – அப்போ விஜய் 69 வர்றது டவுட்டுதான்!

- Advertisement -

நடிகர் விஜய், தமிழக அரசியல் களத்தில் குதிக்க சில ஆண்டுகளுக்கு முன்பே தயாராகி விட்டார். எனினும் அதை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் திரைமறைவில் அதற்கான ஏற்பாடுகளை தனது விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மூலம் மேற்கொண்டு வந்த விஜய், கடந்த பிப்ரவரி 2ம் தேதி, அறிக்கை வெளியிட்டு தனது கட்சி பிரவேசத்தை அறிவித்தார்.

தொடர்ந்து தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்துள்ளதாகவும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி கட்சிப் பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகவும் தனது முதல் அறிக்கையில் தெரிவித்த விஜய், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

- Advertisement -

மேலும் வருகிற 2026 தமிழக சட்டசபை தேர்தல்தான் எங்களது இலக்கு. அதில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று முதல்வர் பதவியை பிடித்து மக்களுக்கு வெளிப்படையான நல்லாட்சி வழங்குவதே எனது குறிக்கோள் என்றும் விஜய் அப்போது அறிவித்தார். மேலும், தி கோட் படத்தை தொடர்ந்து, விஜய் 69 படத்தில் நடிப்பதோடு எனது நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியல்வாதியாக முழுநேர வாழ்க்கையை தொடர்வேன் என்றும் உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 4 மாதங்களாக விஜய் தி கோட் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட நிலையில், அந்த ஷூட்டிங்கை சில வாரங்களுக்கு முன்பே நிறைவு செய்துவிட்டார். மேலும் டப்பிங் பணிகளையும் 2 கட்டங்களாக பேசி முடித்துவிட்டார். விஜய் 69 படப்பிடிப்பை வரும் அக்டோபருக்கு தள்ளி வைத்துள்ள விஜய், அந்த படத்தில் நடிப்பாரா, மாட்டாரா என்பது இன்னும் குழப்பத்தில் இருக்கிறது.

- Advertisement -

ஏனெனில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று 40க்கு 40 என்ற வெற்றிக்களிப்பில் இருக்கிறது. வருகிற 2026 சட்டசபை தேர்தலில், விஜய் எதிர்க்கப் போவது ஆளுங்கட்சியான திமுகவை தான். அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டுதான் அந்த இடத்தில், முதல்வர் நாற்காலியில் விஜய் அமர வேண்டும் என்ற நிலை உள்ளது.

அதனால், தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக விஜய் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதில் மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்கள், தொழில் நகரங்கள், மக்கள் அதிகமாக வாழும் குடியிருப்பு பகுதிகள் என, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வாரம், 10 நாட்கள் வரை முகாமிட்டு மக்களை வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று சந்தித்து தனக்கான ஆதரவை திரட்ட விஜய் முடிவு செய்திருக்கிறார். அப்படி என்றால் தொகுதி வாரியாக அவர் சென்றால், பல மாதங்கள் ஆகும், ஓராண்டுக்கு மேல் கால அவகாசம் தேவை என்பதால் விஜய் 69 படத்தில் அவர் நடிப்பாரா, மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்