நடிகர் சிவகார்த்திகேயன் இளம் ஹீரோவாக காதல் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். சமீபகாலமாக ஹீரோயிசத்தை முன்னிலைப்படுத்திய படங்களில் துவங்கியிருக்கிறார். குறிப்பாக மாவீரன், அமரன், அயலான் போன்ற படங்களில் அவரது நடிப்பு, காதல் படங்களில் இருந்து அடுத்த நகர்வுக்கு வந்துள்ளது.
இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்தும் எஸ்கே 23 படம், வித்யாசமான கதைக்களமாக இருக்கவே வாய்ப்புள்ளது. ஏனெனில் ரமணா, துப்பாக்கி, கஜினி, கத்தி, சர்கார், ஏழாம் அறிவு போன்ற படங்களை தந்துள்ள ஏஆர் முருகதாஸ் நிச்சயமாக சிவகார்த்திகேயனை வைத்து காதல் படமாக தந்திருக்க வாய்ப்பில்லை.
அதுமட்டுமின்றி அயலான் படத் தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயன் பெரிதும் நம்பியுள்ள படம், அமரன், அதே போல், ரஜினி நடித்த தர்பார் படத்தின் படுதோல்விக்கு பிறகு ஏஆர் முருகதாஸ் இயக்கும் இந்த படம், அவருக்கும் கம்பேக் ஆக இருக்க வேண்டும் என்பதால், நிச்சயமாக வித்யாசமான கதைக்களத்தில் திரைக்கதை இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
சமீபத்தில் நடிகர் சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்க முயற்சி பெண் டைரக்டர் சுதா கொங்காரா, சூர்யா செய்த சில இடையூறுகளால் அந்த படத்தையே டிராப் செய்துவிட்டார். இவர் ஏற்கனவே இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற சூப்பர்ஹிட் அதிரடி படங்களை கொடுத்தவர். சூர்யா நடிக்க வேண்டிய படம் டிராப் ஆனதால் சிவகார்த்திகேயன், விக்ரம் இருவரில் ஒருவரை வைத்து சுதா கொங்காரா படம் இயக்கப் போகிறார் என்ற தகவல் பரவியது.
இப்போது சுதா கொங்காரா விக்ரம் மகன் துருவ் விக்ரமை ஹீரோவாக வைத்து படம் டைரக்ட் செய்வது உறுதியாகி உள்ளது. விக்ரம் மகன் துருவ் விக்ரமை சந்திக்க போன போது, அவரை விக்ரம் சந்தித்ததால் விக்ரம் அவரது இயக்கத்தில் நடிக்கப் போவதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் விக்ரம் மகன், துருவ் விக்ரம்தான் சுதா கொங்காரா இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ என உறுதியாகி விட்டது.
இளம் கதாநாயகன் துருவ் விக்ரம் நடிக்கும் இந்த படத்தை முழுக்க முழுக்க காதல் காட்சிகள் நிறைந்த இளம் வயதினர் விரும்பி ரசிக்கக் கூடிய ஒரு காதல் கதையாக எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சுதா கொங்காரா. வழக்கமாக ஆக்சன் படங்களை இயக்க அதிக ஆர்வம் காட்டும் சுதா கொங்காரா, அந்த பாணியில் இருந்து முற்றிலும் மாறி, இப்போது காதல் களத்தில் படம் இயக்குவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்திருக்கிறது.





