எடிட்டர் மோகனின் மகன் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்காக இந்த திரைப்படம் வெளியானது. இதனை அவரது அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
அத்துடன் ரவிக்கு ஜெயம் ரவி என்ற பெயரையும் அந்த திரைப்படம் பெற்று கொடுத்தது. அன்று முதல் இன்று வரை அவர் ஜெயம் ரவி என்ற ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஜெயம் ரவியின் திரையுலக பயணத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் அதனை அவரது அண்ணன் ஜெயம் ராஜாவே இயக்கியிருக்கிறார்.
குறிப்பாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற திரைப்படங்கள் அனைத்துமே ஜெயம் ராஜா இயக்கி அவரது தம்பி ஜெயம் ரவி நடித்தது தான். ஆனால் இந்த திரைப்படங்கள் அனைத்துமே, தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால் அவரை ரீமேக் ராஜா என்று பலரும் கேலி செய்தனர்.
இதைத்தொடர்ந்து தனி ஸ்கிரிப்ட் உருவாக்கி திரைக்கதையை பொறுமையாக எழுதி தனி ஒருவனாக மீண்டு வந்து தனி ஒருவன் திரைப்படத்தை எடுத்தார் ராஜா. அரவிந்த்சாமி வில்லனாக நடித்த அந்த திரைப்படம், தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று என்ற கூறலாம். படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதையின் சுவாரஸ்யம் குறையாததால் மிகப்பெரிய வெற்றியை அந்த படம் பெற்றது.
தற்போது தனி ஒருவன் படத்தில் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் ராஜா ஈடுபட்டு வருகிறார். இதனிடையே ராஜா மற்றும் அவரது தம்பி ஜெயம் ரவி கூட்டணியில் உருவான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்திற்கு முதலில் தனுஷ் நடிக்க இருந்த தகவல் வெளியாகி இருக்கிறது. அம்மா மகன் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த திரைப்படத்தின் மூலம் நதியா கம்பேக் கொடுத்தார். முதல் பாதியில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும், படத்தில் அவரது கதாபாத்திரம் மிக வலுவாக எழுதப்பட்டிருந்தது. ஜெயம் ரவியும் தனது பங்கிற்கு படத்தில் நன்றாக நடித்திருந்தார். இப்படியான சூழலில் தான் அந்த திரைப்படத்தை தனுஷ் மிஸ் செய்து இருக்கிறார். கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே அவர் படத்தில் இருந்து விலகியது தெரியவந்திருக்கிறது.





