- Advertisement -
Homeபொழுதுபோக்குநாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? - கட்சி பெயரை அறிவித்தவுடன் அதிரடி ஆட்டத்தை துவங்கிய டிவிகே...

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? – கட்சி பெயரை அறிவித்தவுடன் அதிரடி ஆட்டத்தை துவங்கிய டிவிகே தலைவர் விஜய்

- Advertisement -

புலி வருது, புலி வருது என்று சொல்லி மிரட்டுவதை போல, விஜய் கட்சி ஆரம்பிக்கிறார் என்பதெல்லாம் சும்மா தான். அவரும் ரஜினியை போல இப்படியே தான் சொல்லி கொண்டிருப்பார் என பலரும் கலாய்த்துக்கொண்டு இருந்த நிலையில், அவர் உண்மையை தான் பேசியிருக்கிறார் என்பதை இன்று தனது கட்சி பெயரை அறிவித்து நிரூபித்து விட்டார்.

இப்போது நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கப் போவது இல்லை. இனி முழுநேரமும் அரசியல்தான் பணி என்ற முடிவுக்கு வந்த நடிகர் விஜய், தமிழக வெற்றி இயக்கம் என தனது கட்சி பெயரை இன்று அறிவித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.

- Advertisement -

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அந்த பெயரை பதிவு செய்ய இன்று விண்ணப்பித்துள்ள நிலையில், அடுத்தடுத்த விவரங்களை இனி வரும் நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் மதுரையில் மாநாடு நடத்தி கட்சிக்கொடி மற்றும் கட்சியின் கொள்கைகள், தீர்மானங்கள் குறித்த அதில் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட விஜய் மக்கள் இயக்கம் கூட்டத்தில், செயற்குழு பொதுக்குழு கூட்டி, கட்சியின் பெயர், தலைமை நிர்வாகிகள் குறித்தும் முடிவு செய்யப்பட்டது. அதில் கட்சியின் தலைவராக நடிகர் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த புஸ்லி ஆனந்த், கட்சியின் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யபப்ட்டுள்ளார். விஜய் கட்சி பெயரை அறிவித்தவுடன் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியாக உற்சாகமாக கொண்டாடி வருகி்னறனர்.

இன்று கட்சி பெயரை அறிவித்துள்ள நடிகர் விஜய், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளார். மேலும், இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது என்பதையும் உறுதிபடுத்தி விட்டார். கட்சியின் இலக்கு 2026ம் ஆண்டில் நடக்கப் போகும் தமிழக சட்டசபை தேர்தல்தான் என்பதையும் உறுதிபடுத்தி விட்டார்.

- Advertisement -

சற்று முன்