- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசைகள் குறித்து பேசிய பிரபல நடிகர் - அட இயக்குனர் இமயத்துக்கே...

இயக்குனர் பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசைகள் குறித்து பேசிய பிரபல நடிகர் – அட இயக்குனர் இமயத்துக்கே இப்படி ஒரு மன வேதனையா?

- Advertisement -

தமிழ் சினிமா படப்பிடிப்புகளை பிரமாண்ட மண்டபங்களிலும், ஸ்டார் ஓட்டல்களிலும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற இயற்கை சூழ்ந்த மலைப் பகுதிகளில் இயக்குனர்கள் படமாக்கிக் கொண்டு இருந்த காலகட்டத்தில், செம்மண் புழுதி பறக்கும் கரட்டு காடுகளுக்குள் கேமராவை தூக்கிக் கொண்டு சென்றவர் இயக்குனர் பாரதிராஜா.

மின்சார விளக்குகள் வசதி கூட இல்லாத, குக்கிராமங்களில் வாழும் யதார்த்த மக்களின் வாழ்வியலை, அவர்கள் படும் வாழ்க்கை பாடுகளை, உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை, அவர்களின் தினசரி வாழ்க்கை போராட்டங்களை தனது கிராமியக் கதைகள் வாயிலாக, கேமராக்களில் பதிவு செய்து, படமாக்கி தந்து ஒரு கலையநயம் மிக்க சிறந்த படைப்பாளியாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் பாரதிராஜா.

- Advertisement -

40 ஆண்டுகளுக்கு முன், 1980களில், சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் வெளிவந்த முதல் மரியாதை படத்தை, இன்னொரு முறை இயக்குனர் பாரதிராஜாவே இயக்க நினைத்தாலும், அப்படி ஒரு படைப்பை தர முடியாது என்று சொல்லும் அளவுக்கு, இப்போது முதல் மரியாதை படம், பார்க்க பார்க்க காட்சிக்கு காட்சி ரசிக்கும்படி இருக்கிறது.

கல்லுக்குள் ஈரம், 16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், கடலோரக் கவிதைள், முதல் மரியாதை என பாரதிராஜா இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருந்தன. இயக்குனராக மட்டுமின்றி பல படங்களில் நடித்திருக்கிறார் பாரதிராஜா. இப்போதும் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படத்திலும் பாரதிராஜா சில காட்சிகளில் வந்தாலும், பேர் சொல்லும்படி நடித்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் மற்றும் இயக்குனர் சித்ரா லட்சுமணன், இயக்குனர் பாரதிராஜா இயக்கிய பலபடங்களில் உதவி இயக்குனராக பணிசெய்தவர்தான். ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் கவுண்டமணியிடம் கலாட்டா செய்யும் முனுசாமி இவர்தான். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில், பேங்க் மேனேஜராக வந்து சந்தானம் கிண்டல் செய்யும் கேரக்டரிலும் சித்ரா லட்சுமணன் நடித்திருப்பார்.

இயக்குனர் பாரதிராஜா குறித்து சித்ரா லட்சுமணன் நேர்காணல் ஒன்றில் கூறுகையில், பாடகர் டிஎம் சௌந்தர்ராஜனை, பாரதிராஜாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவரது கணீர் குரல் பாரதிராஜாவுக்கு ரொம்ப பிடிக்கும். அது வெறும் மனித குரல் அல்ல. தமிழின் குரல் என்பார். தன் படத்தில் ஒரு பாடலாவது டிஎம்எஸ் பாட வேண்டும் என்று பாரதிராஜா ஆசைப்பட்டும் அது கடைசி வரை நடக்கவில்லை. அதே போல் நடிப்பு பொக்கிஷங்களான பத்மினி, மனோரமா, நாகேஷ் ஆகியோர் தன்னுடைய இயக்கத்தில் ஒரு படத்தில் கூட நடிக்காதது அவருக்க தீராத மன வேதனையாக இருந்தது என்று பாரதிராஜா வருத்தப்பட்டதாக, சித்ராலட்சுமணன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்