- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கராவை போனில் அழைத்து பேசிய நடிகர் சூர்யா, போடு வெடிய...

பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கராவை போனில் அழைத்து பேசிய நடிகர் சூர்யா, போடு வெடிய – புறநானூறு படத்தில் இப்படி ஒரு திடீர் திருப்பமா?

- Advertisement -

ஒரு நடிகரின் வளர்ச்சி என்பது, பெரும்பாலும் இயக்குனர்களின் கைகளில்தான் இருக்கிறது. அதை நடிகர் ரஜினிகாந்த் இவ்வளவு உயரத்துக்கு வந்த பிறகும், இன்னும் அதை மறக்காமல் இருக்கிறார். தனது வெற்றியை பற்றி பேசும் போதெல்லாம் என் வளர்ச்சிக்கு காரணம், இயக்குனர்களும் அவர்கள் தந்த கதையும், கேரக்டர்களும்தான் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

அதுமட்டுமின்றி, இயக்குனர்களுக்கு இன்றும் ரஜினி தரும் மரியாதை, எல்லா கலைஞர்களும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. ஜெயிலர் படப்பிடிப்பில், ரெப்ரெஷ் செய்துக்கொள்ள கேரவனுக்கு செல்வதாக இருந்தால் கூட, டைரக்டர் நெல்சனிடம் வந்து சொல்லிவிட்டுதான் ரஜினி செல்வாராம். இயக்குனர் அந்த பக்கமாக வந்தால், ரஜினி எழுந்து நின்றுகொள்வாராம். அதானாலேயே, நான் ரஜினி இருந்தால், அவர் எழுந்திப்பாரே, என பின்பக்கமாக சுற்றிச் செல்வேன் என்று நெல்சனே ஜெயிலர் விழாவில் பேசும்போது குறிப்பிட்டார்.

- Advertisement -

ஆனால் ரஜினி போன்றவர்களே இப்படி இருக்கும் போது சூர்யா போன்ற நடிகர்கள் செய்கிற அலப்பரை, பலரையும் அதிருப்தியடைய வைக்கிறது. டைரக்டர் பாலா படத்தில் நடிக்க பல நடிகர்கள் தவம் இருக்கிற சூழலில், வணங்கான் படத்தில் ஒரு மாதம் மட்டுமே நடித்து விட்டு, பிறகு நடிக்க மாட்டேன் என்று விலகி விட்டார்.

பிறகு இந்திய அளவில் சிறந்த இயக்குனராக கவனிக்கப்படும் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்கிறாரா, இல்லையா என்ற சந்தேகமும், குழப்பமும் பல மாதங்களாக நீடித்து வந்தது. ஆனால் பருத்திவீரன் படம் தயாரிப்பு விவகாரத்தில் இயக்குனர் அமீருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சூர்யா நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் சூர்யா நடிப்பது உறுதி என்று லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், புறநானூறு என்ற படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர் சூர்யா, கதையில் நிறைய மாற்றங்களை சொன்னதால், அந்த படமே டிராப் ஆகி விட்டது. இதனால் சுதா கொங்கரா பயங்கர அப்செட்டிலும், சூர்யா மீது கடும் அதிருப்தியிலும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் சுதா கொங்கராவை போனில் அழைத்துப் பேசிய நடிகர் சூர்யா, புறநானூறு படம் டிராப் ஆனது பரவாயில்லை. நீங்கள் வேறு ஒரு கதை தயார் செய்யுங்கள், நாம் இணைந்து பணிசெய்வோம். எனது அடுத்த படமாக அதில் நடிக்கிறேன் என்று சமாதானம் பேசியிருக்கிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சுதா கொங்கரா, எனது அடுத்த படமே புறநானூறுதான். அந்த படத்தை கண்டிப்பாக பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார். இதில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்