கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான, முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மலையாளத்திலிருந்து வந்து தமிழில் பல ஹிட் படங்கள் நடித்து முன்னணி நடிகையாக உருவாகி இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
கீர்த்தி சுரேஷ் மலையாள படங்களில் நடித்து, தமிழ் சினிமாவுக்கு வந்தவர். இவரது அம்மா மேனகா, கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார். நெற்றிக்கண் படத்தில், ஒரு ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதே போல் கடைக்குட்டி சிங்கம் படத்தில், கீர்த்தி சுரேஷின் பாட்டி, மேனகாவின் அம்மாவும் நடித்திருப்பார். கீர்த்தியின் அப்பா சுரேஷ் மலையாள படத் தயாரிப்பாளர் என குடும்பமே சினிமா பின்னணி சார்ந்தது.
தமிழில் அவர் அண்ணாத்த, பைரவா, சர்க்கார், தொடரி, சாமி 2, ரெமோ, ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார். தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரிக்கும் கண்ணிவெடி என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க கமிட் செய்யப்பட்டிருக்கிறார். இது கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா, திரிஷா வரிசையில் கீர்த்தி சுரேஷ் அதிக அளவில் கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடித்து அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக கீர்த்தி சுரேஷ் நடித்த, மறைந்த நடிகை சாவித்திரி தேவி வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. அந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் மிக அற்புதமான, அழுத்தமான நடிப்பை தந்திருந்தார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது வெளியான ஜெயம் ரவி நடித்த கதாநாயகனாக நடித்த சைரன் படத்திலும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்திருந்தார். இந்நிலையில் கண்ணிவெடி படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே வாங்கி இருந்தது.
கண்ணிவெடி படத்தை வரும் 2024 டிசம்பர் மாதத்தில் ஒளிபரப்பு செய்யவும் அந்த ஓடிடி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. இப்படி முன்னணி நாயகி நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை தமிழ் சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது. அதுவும் டிஜிட்டல் ரைட்ஸ் வாங்கிய காலத்துக்குள், டெலிகாஸ்ட் செய்வதற்கு ஏதுவாக இந்த படம் வெளியாகுமா என்பதும் ஒரு மிகப்பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.





