- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ஜெயம் ரவிக்கு இப்படி ஒரு நிலமையா? தகவல் அறிந்து நிலைகுலைந்து போன அவரது ரசிகர்கள்...

நடிகர் ஜெயம் ரவிக்கு இப்படி ஒரு நிலமையா? தகவல் அறிந்து நிலைகுலைந்து போன அவரது ரசிகர்கள் – அருண்மொழி செல்வனுக்கு என்னதான் ஆச்சு?

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது அறிமுகப் படம் ஜெயம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், தனது பெயருக்கு முன்னால் ஜெயம் சேர்த்துக்கொண்டு ஜெயம் ரவி ஆனார். அடுத்து நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படமும் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது.

தொடர்ந்து வனமகன், பேராண்மை, சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன், போகன், அடங்கமறு என பல வெற்றிப்படங்களை கொடுத்த ஜெயம் ரவிக்கு கடந்த பல ஆண்டுகளாக தோல்வி படங்களாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட மிருதன், சைரன், பூமி, அகிலன், இறைவன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி, தனது கல்லூரி தோழி ஆர்த்தியை காதல் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இந்த காதல் திருமணத்துக்கு இரு தரப்பிலுமே பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் வேறுவழியின்றி அவர்கள் திருமணத்துக்கு அவர்கள் சம்மதித்தனர். ஆனால் திருமணத்துக்கு பிறகு, தனது மனைவி குடும்பத்தினரிடம் அதிக நெருக்கம் காட்டியுள்ளார் ஜெயம் ரவி.

திரைப்படங்கள் தயாரிப்பு, டிவி நிகழ்ச்சிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஆர்த்தியின் அம்மா, ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஜெயம் ரவியின் சில படங்களை தயாரித்தார். இதில் அடங்க மறு படம் மட்டுமே பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் பூமி, சைரன் போன்ற படங்கள் படுதோல்வியடைந்தது.

- Advertisement -

இந்த சூழலில், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட ஜெயம் ரவி ஆர்த்தி, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விதவிதமான கிளாமர் டிரஸ்களில் புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்தார். மேலும், ஜெயம் ரவியுடன் நடிக்கும் நடிகைகள், அவர்களுடன் ஜெயம் ரவிக்கு உள்ள நெருக்கம் குறித்து ஜெயம் ரவியின் நட்பு வட்டாரத்தில் அடிக்கடி விசாரித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட விரிசல், இருவரது பிரிவுக்கும் காரணமாகி உள்ளது.

ஜெயம் ரவி வீடு ஈசிஆரில் உள்ளது. ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தனது பழைய வீட்டை பல ஆண்டுகளாக ஜெயம் ரவி, தனது அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி, தனது சொந்த வீட்டுக்கு, பெற்றோர் வீட்டுக்குச் செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கிக்கொண்டு படப்பிடிப்புகளில் கலந்துக்கொண்டு வருகிறார். ஜெயம் ரவி போன்ற மிகப்பெரிய நடிகருக்கு இப்படி ஒரு நிலமையா, என அவரது ரசிகர்கள் நொந்துபோய் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்