வாரிசு அரசியல் போல வாரிசு சினிமா நடிகராக பலர் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றனர். இப்போதும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க வந்தார். அதன்பிறகு அவரது மகன் பிரபு நடிக்க வந்தார். இப்போது பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் விக்ரம் பிரபு அறிமுகமானார். முதல் படமே பெரிய வெற்றியை அடையாளத்தை கொடுத்தது. இதில் யானை பாகனாக அவர் நடித்திருந்தார். தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்த படங்களில் அரிமா நம்பி இவன் வேற மாதிரி சிறை போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன.
ஆனால் வாரிசு நடிகர்களில் பெரிய வெற்றிக்காக போராடிக்கொண்டு இருக்கிற நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்தான். அவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்தாலும் சில நேரங்களில் மற்ற நட்சத்திர நடிகர்களின் படங்களால் இவரது படங்கள் சில நேரங்களில் இருட்டடிப்பு ஆகி விடுகின்றன.
எனினும் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான சிறை படம் விக்ரம் பிரபுவுக்கு மிகப்பெரிய ஒரு இமேஜை கொடுத்தது. இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் அவரது நடிப்பு மிகவும் அழுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. டாணாக்காரன் படம் போலவே இதுவும் விக்ரம் பிரபுவுக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் விக்ரம் பிரபு கூறியதாவது, அன்னை இல்லம் வீட்டுல எந்த விஷயத்திற்கும் வற்புறுத்த மாட்டாங்க. ஆனால் எல்லாரும் படித்து ஒரு டிகிரியாவது வாங்கணும் அதுக்கு காரணம் தாத்தா தான். அவர்தான் அப்படி ஒரு ரூல்ஸ் கொண்டு வந்தார்.
எங்க வீட்ல மாடியில் ஒரு சின்ன பையன் கையில் புத்தகத்தோடு இருக்கிற மாதிரி ஒரு சிலை இருக்கும். எங்க தாத்தா கூட பிறந்தவங்க லண்டன் எல்லாம் போய் படிச்சாங்க. ஆனா தாத்தா அந்தளவுக்கு பெருசா படிக்கலே. அதனால மத்தவங்களாவது படிக்கணும்ன்னு நினைச்சு தான் அந்த சிலையை தாத்தா வெச்சார் என்று நடிகர் விக்ரம் பிரபு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





