- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இந்த ஆசை நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கும் வந்துவிட்டதா? - விஜய் சேதுபதி பட டைரக்டரை...

அட இந்த ஆசை நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கும் வந்துவிட்டதா? – விஜய் சேதுபதி பட டைரக்டரை வளைத்து போட்ட மர்மம் இதுதானா?

- Advertisement -

ஒரு படத்தில் நடித்தாலும் அந்த படம் மிகவும் சிறப்பாக அமைந்துவிட்டால் அந்த நடிகரின் அடையாளமாக அது மாறிவிடுகிறது. பிறகு அந்த நடிகரை பற்றி சொல்லும் போதெல்லாம், அந்த படத்தில் நடித்தவர்தான் என்று குறிப்பிட்டுச் சொல்வது, குறியீடாக அடையாளப்படுத்துவது ரசிகர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் அப்படி ஒரு படம் எல்லா நடிகர்களுக்குமே வாய்ப்பதில்லை.

ரஜினிக்கு ஒரு பாட்ஷா, கமலுக்கு ஒரு தேவர் மகன், விஜயகாந்துக்கு ஒரு கேப்டன் பிரபாகரன், சத்யராஜூக்கு ஒரு அமைதிப்படை, பிரபுவுக்கு ஒரு சின்னதம்பி, அர்ஜூனுக்கு ஒரு முதல்வன், விஜய்க்கு ஒரு கில்லி, அஜீத்குமாருக்கு ஒரு காதல் கோட்டை, சூர்யாவுக்கு ஒரு கஜினி, தனுஷூக்கு ஒரு ஆடுகளம் போல, நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஒரு படம் என்றால் அது பார்க்கிங் படம்தான்.

- Advertisement -

ஏனெனில், பிக்பாஸ் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பரிச்சயமான ஹரீஷ் கல்யாண், அதற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பையும், அடையாளத்தையும் பெற்றுத் தரவில்லை. தாராள பிரபு, இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும், பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அவர் மிகச்சிறந்த நடிப்பை அந்த படங்களில் தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் பார்க்கிங். இந்த படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் காமெடி நடிகர் எம்எஸ் பாஸ்கர். ஆனால் அவர் குணச்சித்திர நடிப்புக்கு எப்போதோ மாறிவிட்டார் என்பதும் கவனிக்க வேண்டிய உண்மை. பார்க்கிங் படத்தில் ஹரீஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் நடிப்பு வேற லெவலில் இருந்தது. படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பார்க்கிங் 2ம் பாகத்தை நோ பார்க்கிங் என்ற பெயரில் எடுக்க உள்ளதாக ஒரு தகவல் உள்ளது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் ஹரீஷ் கல்யாண், மற்ற நடிகர்களை போல தானும் கமர்ஷியல் ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் மசாலா படங்களை தரக்கூடிய இயக்குனர்களை அழைத்து, தன் விருப்பத்தை சொல்லி தனக்கேற்ப ஒரு அதிரடி ஆக்சன் கலந்த படத்தை இயக்கும் வகையில், அதற்கான கதையை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார். இப்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது.

விஜய் சேதுபதி நடித்த றெக்க என்ற கமர்ஷியல் படத்தை, அதாவது மசாலா அடிதடி படத்தை இயக்கிய ரத்தின சிவா, ஹரீஷ் கல்யாணை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை ஹரீஷ் கல்யாணின் மேனேஜர்தான், புரடியூசராக தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. கதையின் நாயகனாக இல்லாமல், மசாலா கதை நாயகனாக மாறினால்தான் கமர்ஷியல் நடிகராக முடியும் என்ற ஆசையில், இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் பார்க்கிங் படத்தின் நாயகன் நடிகர் ஹரீஷ் கல்யாண்.

- Advertisement -

சற்று முன்