சூர்யா கடைசியாக திரையில் தோன்றிய திரைப்படம் விக்ரம். 2022 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. அதில் கிளைமாக்ஸில் வெறும் பத்தே பத்து நிமிடங்கள் மட்டும் அவர் வந்திருப்பார். இருப்பினும் அதற்கான தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. பலரும் சூர்யாவின் அந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை விரும்பினர்.
சூர்யாவும், தான் ஏற்றுக் கொன்ற அந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார். ஒரு ஆக்ரோஷமான வில்லனாக அவர் மிரட்டி இருந்தார். குறிப்பாக சூர்யா பேசும் வசனங்கள், இணையத்தில் வைரலாகின. அதனை அப்படியே காப்பி அடித்து இங்கு பலரும் வீடியோ வெளியிட்டனர்.
சொல்லப்போனால் சூர்யாவிற்கு ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய பெயரையே பெற்றுக் கொடுத்தது. ஆனால் இந்த திரைப்படத்திற்குப் பிறகு சூர்யா இதுவரை திரையரங்குகளில் பிரவேசிக்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள். விக்ரம் படத்திற்கு பிறகு அவர் ஒப்புக்கொண்டது பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில்தான்.
இதற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரியில் ஆரம்பமாக, முதல் போஸ்டரும் வெளியானது. ஆனால் சூட்டிங் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், படத்திலிருந்து விலகினார் சூர்யா. இதன் பிறகு வணங்கான் திரைப்படத்திற்குள் அருண் விஜய் உள்ளே வர, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சூர்யா.
இந்தப் படத்திற்காக சூர்யா செலவிட்ட காலங்கள் மிக அதிகம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு மட்டுமே நடத்தப்பட்டது. வரலாறு பின்னணி சார்ந்த படம் என்பதால் சூர்யாவும் இதில் அமைதி காத்தார். இதில் அவர் மட்டுமின்றி பாபி தியோல், திஷா பதானி, ஜெகபதிபாபு, நட்டி, கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து மொழிகளில் இது ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் கங்குவார் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். இது முதல் பாகத்தின் முந்தைய பாகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். 2025 ஆம் ஆண்டு இதன் சூட்டிங் ஆரம்பித்து ஒரு வருடம் முழுவதும் நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல் 2027 ஆம் ஆண்டு கங்குவா இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.





