தமிழ் சினிமாவில் 300 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்கள், 600 கோடி, 700 கோடி என வசூல் செய்தால், படத்தை தயாரித்த தயாரிப்பாளர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில், படத்தின் ஹீரோவுக்கு பரிசளிப்பது, டிரண்டிங் ஆகி விட்டது. அதனால் விலை உயர்ந்த ஒரு கோடி, ஒன்றரை ரூபாய் மதிப்பிலான கார்களை வாங்கி பரிசளிக்கின்றனர்.
முதன்முறையாக விக்ரம் படத்தை வெற்றிப்படமாக இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு, நடிகர் கமல் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்தார். விக்ரம் படத்தில், கிளைமாக்ஸில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார். இது சமூக வலைதளங்களில் டிரண்டிங் ஆனது.
இதையடுத்து தற்போது, ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து, படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத் என மூன்று பேருக்குமே விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கி, பிரமிக்க வைத்தார்.
இதே போல், மாமன்னன் படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜூக்கு, அதில் ஹீரோவாக நடித்த, படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின், கார் பரிசளித்து பாராட்டினார். இப்படி, இயக்குநர்களுக்கு கார், நடிகர்களுக்கு கார் பரிசாக வழங்குவது, தமிழ் சினிமாவில் இப்போது பேஷனாக மாறிவிட்டது.
இதற்கிடையே, நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் லலித்குமார் கார் பரிசளிக்க முன்வந்த போது, அதை அவர் மறுத்துவிட்டதாக, ஒரு தகவல் இப்போது வேகமாக வைரலாகி வருகிறது. மற்ற நடிகர்கள், இயக்குநர்கள் காரை பரிசளித்தால் ஏற்றுக்கொள்ளும்போது, கார் பரிசு வேண்டாம் என விஜய் மறுத்ததற்கும் காரணம் தெரிய வந்துள்ளது.
அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோவுக்கு முன் எடுக்கப்பட்ட படம் மாஸ்டர்.இந்த படம் விஜய்க்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அப்போது, மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், கார் பரிசாக அளிக்க விரும்புவதாக விஜயிடம் தெரிவித்துள்ளார். அதுதான் சம்பளம் தந்துட்டீங்களே, அப்புறம் கார் எதற்கு, வேண்டாம் என கூறியதாக, ஒரு சமீபத்தில் நேர்காணலில் லலித்குமார் கூறி இருக்கிறார். நடிகர் விஜயின் பினாமிதானே லலித்குமார். அவருக்கு, அவரே கார் கொடுத்துக்குவாரா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.





