இயக்குனர் அமீர் இயக்கத்தில், பருத்திவீரன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இவரது பல படங்கள் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும், பெரிய தோல்வி படங்கள் என்று கூற முடியாது, சராசரியான லாபத்தை கொடுக்கும் படங்களாக சில படங்கள் இருந்தன. சில படங்கள் பெரிய அளவில் பேசப்படும் வெற்றிப் படங்களாகவம் இருந்தன.
ஆனால் கார்த்தி நடித்த அவரது 25வது படமான ஜப்பான் படம், அதுவரை வெளிவந்த கார்த்தி படங்களில், இதைப் போன்ற மிக மோசமான படம் எதுவுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிளாப் ஆக போய்விட்டது. இப்போது இந்தியன் 2 படத்தை விமர்சிப்பதை விடவும், ஜப்பான் படத்தை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர்.
அதற்கு பின் இப்போது கார்த்தி நடிப்பில் மெய்யழகன், வா வாத்தியாரே ஆகிய 2 படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்த இரண்டு படங்களுமே கார்த்திக்கு கம்பேக் படங்களாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே சர்தார் 2, டாணாக்காரன் இயக்குனர் தமிழ் இயக்கும் ஒரு படத்திலும் நடிகர் கார்த்தி நடிக்க இருக்கிறார்.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு கைதி 2 படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் கார்த்தி. அதே போல் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தை முடித்துவிட்டு, கைதி 2 படப்பிடிப்புக்கு வந்துவிடுவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் உறுதியளித்து விட்டார். இதையடுத்து 2025ம் ஆண்டில் கைதி 2 படப்பிடிப்பு துவங்கப்பட வாய்ப்புகள் உருவாகி உள்ளது.
இந்த முறை கைதி 2 படத்தில் எல்சியு முறையில் ஒரு பெரிய மாஸ்டர் பிளானையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போட்டு வைத்துள்ளார். அதன்படி இதுவரை லோகேஷ் கனகராஜ் படங்களில் நடித்த அனைத்து கேரக்டர்களுமே கைதி 2 படத்தில் வரும்படியான காட்சியமைப்பை அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதனால் கமல், ரஜினி, சூர்யா, மிஷ்கின், சாண்டி மாஸ்டர், அர்ஜூன்தாஸ் என பல நடிகர்கள், நடிகைகள் இந்த படத்தில் எல்சியு கேரக்டர்களில் வருவதற்கான திட்டமிடல் உள்ளது. ஆனால் இதில் நடிகர் விஜய் மட்டும் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் விஜய் தனது 69 படத்துடன் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளார். அதனால் கைதி 2 படத்தில், பின்னணியில் அவரது குரல் ஒலிக்க ஒத்துக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.





