- Advertisement -
Homeபொழுதுபோக்குஆழம் தெரியாமல் காலை விட்டால்… பெரிய நடிகர்களை நம்பி மோசம் போன பிரபல தயாரிப்பு நிறுவனம்...

ஆழம் தெரியாமல் காலை விட்டால்… பெரிய நடிகர்களை நம்பி மோசம் போன பிரபல தயாரிப்பு நிறுவனம் – மணிரத்னம், ஷங்கர் சோலிய முடிச்சுட்டாங்க, ரஜினி, அஜீத் கை கொடுப்பாங்களா?

- Advertisement -

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் சமந்தா நடிப்பில் உருவான கத்தி என்ற படத்தை முதன்முறையாக தயாரித்து தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தது லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நல்ல வெற்றி படங்களை தயாரித்து தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கிறார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக லைகா புரடக்சன்ஸ் தயாரித்த பல படங்கள் சரியாக போகவில்லை. இதனால் அந்த நிறுவனத்துக்கு தொடர்ந்து நஷ்டங்களே ஏற்பட்டது. எனினும் கார்பரேட் நிறுவனம் என்பதால் பிற தொழில்களில், துறைகளில் அவர்களுக்கு வர்த்தக ரீதியாக நிறைய லாபங்கள் இருந்ததால் படங்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டினர்.

ஆனால் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2ம் பாகம், இப்போது வெளிவந்துள்ள இந்தியன் 2 போன்ற படங்கள் மிகப்பெரிய நஷ்டத்தை தந்துள்ளன. பொன்னியின் செல்வம் 1 பாகம் நல்ல வசூலை தந்த நிலையில், 2ம் பாகம் பெரிய ஏமாற்றத்தை தந்தது.

இதற்கிடையே நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் 10 மொழிகளில் பான் இந்தியா படம் ஒன்றை தயாரிக்கவும் லைகா புரடக்சன்ஸ் திட்டமிட்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து சினிமா தயாரிப்பில் நஷ்டங்களே நீடிப்பதால் சினிமா தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாமா, என்ற தீவிர யோசனையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் இருந்து வருகிறார். அதனால் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தை தயாரிக்குமா, அல்லது மறுத்துவிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் ஏற்கனவே கமிட் ஆன படங்களை முடித்துவிடும் முடிவில்தான் லைகா புரடக்சன்ஸ் இருக்கிறது. அந்த வகையில் ரஜினி நடித்த வேட்டையன், ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படங்களை முடித்துவிட்ட நிலையில், இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படமும் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை நெருங்கியிருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மிகப்பெரிய வெற்றி, வசூலை குவிக்கும் என்ற எதிர்பார்த்த லைகாவுக்கு, கமல் மற்றும் ஷங்கர் பலத்த ஏமாற்றத்தை தந்துவிட்டனர். இப்போதைக்கு வேட்டையன் ரஜினி, விடாமுயற்சி அஜீத்குமார் இருவரும் கை கொடுத்தால் மட்டுமே லைகா நஷ்டத்தில் இருந்து மீள முடியும். ஆனால் மீண்டும் படங்கள் தயாரிப்பது சந்தேகம்தான். பெரிய நடிகர்களின் கால்ஷீட்டை நம்பி, கதையே இல்லாமல் படம் எடுக்கும் இயக்குனர்களை நம்பினால் இதுதான் கதி என்பதை லைகாவை பார்த்தாவது, இனி மற்ற சினிமா தயாரிப்பாளர்கள் திருந்த வேண்டும்.

சற்று முன்