- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இயக்குனர் மறைவுக்கு பின், 11 ஆண்டுகளாக வறுமையில் வாடும் அவரது குடும்பம், கண்டுக்காத தமிழ்...

பிரபல இயக்குனர் மறைவுக்கு பின், 11 ஆண்டுகளாக வறுமையில் வாடும் அவரது குடும்பம், கண்டுக்காத தமிழ் சினிமா – சீமான் கூட உதவலையே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக பல நல்ல படங்களை தந்தவர் ராசு மதுரவன். குறிப்பாக அவர் இயக்கிய பூ மகள் ஊர்வலம், முத்துக்கு முத்தாக, மாயாண்டி குடும்பத்தார், பாண்டி, பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம், கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதில் முத்துக்கு முத்தாக, மாயாண்டி குடும்பத்தினர் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த படங்களாக இருந்தன.

ராசு மதுரவன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், இளவரசு, சீமான், நட்டி என்கிற நடராஜ் என பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். நல்ல குடும்ப படங்களை தந்து, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் ராசு மதுரவன். ஆனால் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டில் உயிரிழந்தார். அவர் மறைந்து 11 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

- Advertisement -

இந்நிலையில், அவரது மறைவுக்கு பின் அவரது குடும்பத்தினர் மிகவும் வறுமை நிலையில் வாடி வருகின்றனர். மறைந்த இயக்குனர் ராசு மதுரவனுக்கு பவானி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதில் ஒரு பெண் பிளஸ் 2 படிக்கிறார், மற்றொரு பெண் 10ம் வகுப்பு படித்து வருகிறார். யதார்த்த வாழ்க்கையை சினிமாவாக காட்டிய ராசு மதுரவன் குடும்பமும் யதார்த்த வாழ்க்கையில் வறுமையில் 11 ஆண்டுகளாக போராடி வருகிறது.

சமீபத்தில், இயக்குனர் ராசு மதுரவனின் மனைவி பவானி, நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, என் கணவரின் மறைவுக்கு பின் வாழ்க்கையில் நிறைய பொருளாதார கஷ்டங்களை சந்தித்து வருகிறோம். அவர் இருந்த வரைக்கும் நான் வேலைக்கு போனதே இல்லை. குடும்பத்தை மிகவும் அன்பாக, அக்கறையாக கவனித்துக்கொண்டார்.

- Advertisement -

ஆனால் இப்போது எங்களது குடும்பத்தை பொருளாதார ரீதியாக கவனித்துக்கொள்ள யாருமே இல்லை. நான் தனியார் பள்ளி ஒன்றில் கிண்டர் கார்டன் டீச்சராக வேலைக்கு போய்க்கொண்டு இருக்கிறேன். அதில் வரும் சம்பளம் 12 ஆயிரம் ரூபாயை வைத்துதான் குடும்பத்தை சிரமப்பட்டு நடத்திக்கொண்டு இருக்கிறேன். என் மகள்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டக் கூட கடன் வாங்கிக்கொண்டு இருக்கிறேன்.

சினிமா துறையில் இருந்து இதுவரை யாருமே எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது கூட யாருமே உதவவில்லை. அவரது டைரக்‌ஷனில் நடித்தவர்கள் கூட எங்களை தொடர்பு கொள்ளவில்லை. சீமான் அண்ணனுக்கு போன் செய்தேன். அவரது வாட்ஸ் அப்புக்கு மெசேஜ் அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை. என் பிள்ளைகளின் படிப்புக்காவது உதவுங்கள், என்று அவர் அதில் உருக்கமாக கூறியிருக்கிறார். பிரபல இயக்குனர் ராசு மதுரவன் குடும்பத்துக்கே இப்படி ஒரு நிலையா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்