- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்ன கதைன்னே புரியலையே… கடும் விமர்சனங்களை கடந்து ரூ. 1000 கோடி வசூல் சாதனையை புரிந்த...

என்ன கதைன்னே புரியலையே… கடும் விமர்சனங்களை கடந்து ரூ. 1000 கோடி வசூல் சாதனையை புரிந்த பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி – என்னப்பு சொல்றீக?

- Advertisement -

வெறும் பிரமாண்டத்தை நம்பி எடுக்கப்பட்ட பல படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றன. அதே நேரத்தில் கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட சில படங்கள், மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றிருக்கின்றன. இதற்கும் அந்த படங்கள், சில கோடிகளில் எடுக்கப்பட்ட சின்ன பட்ஜெட் படங்களாகவும் இருக்கின்றன.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சில கோடிகள் இருந்தாலே முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர் என சூப்பர்ஹிட் படங்களை எடுத்துவிட முடியும். உதாரணமாக பி வாசு இயக்கத்தில் வெளிவந்த சின்னதம்பி படம் பிரபு, குஷ்பு நடிப்பில் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 30 லட்சம் ரூபாயை கூட தாண்டவில்லை.

- Advertisement -

அதே போல், ரூ, 50 லட்சம் மொத்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் நாட்டாமை. இந்த படத்தில் சரத்குமார், கவுண்டமணிக்கு தலா ரூ. 10 லட்சம் போக, மீதி 30 லட்சம் ரூபாய் டைரக்டர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தை கொடுத்து, படத்தையும் சிறப்பாக முடித்தவர் கேஎஸ் ரவிக்குமார். இந்த படம், இப்போதும் ரசிக்கப்படும் ஹிட் படமாக உள்ளது.

ஆனால் இப்போதெல்லாம், பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் என்றாலே, அது பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாக வேண்டும். 300 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் இருக்க வேண்டும். இதில் இயக்குனர், ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர் சம்பளமே ரூ. 200 கோடிக்கு மேல் போய்விடும். மீதி இருக்கும் 100 கோடி ரூபாய்க்குள் படத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலைதான் உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் பான் இந்தியா படமாக வெளியான படம் கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்திருந்தார். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், விஜய தேவரகொண்டா, துல்கர் சல்மான், வில்லன் கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருந்த இந்த படம், முதல் பாகமாக வெளிவந்தது. ஆனால் படமே புரியவில்லை என்றுதான் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் புலம்பினர்.

எனினும் இந்த படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கல்கி படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டாடப்பட்டது. அதே போல் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழகம், கேரளத்தில் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. இரண்டே வாரங்களில் இந்த படம் 1000 கோடி ரூபாயை வசூலை கடந்துள்ளது. 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த 3வது படமாக கல்கி சிறப்பு பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்