- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தில் என்னென்ன விஷயங்கள் இருக்குது தெரியுமா? - படத்தோட ஒளிப்பதிவாளர் கொடுத்த...

அஜீத்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தில் என்னென்ன விஷயங்கள் இருக்குது தெரியுமா? – படத்தோட ஒளிப்பதிவாளர் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, இன்னும் முடிவடையவில்லை. இன்னும் 10 நாட்கள், ஐதராபாத்தில் இறுதிகட்ட சண்டை காட்சிகள் படம்பிடிக்கப்பட உள்ளன. அதன்பிறகுதான் ஷூட்டிங் நிறைவடையும்.

இதன்பிறகு அஜீத்குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துவரும் குட்பேட்அக்லி படப்பிடிப்பின் 2வது ஷெட்டியூலில் கலந்துக்கொள்கிறார். இது ஜப்பான், லண்டன், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என வெளிநாடுகளில் எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் கதைக்களமே வெளிநாடுகள் என்றும் கூறப்படுகிறது.

விடாமுயற்சி படம் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், அடிக்கடி அப்டேட்டுகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. இதுவரை மூன்று முறை அஜீத் புகைப்படங்கள் அப்டேட் ஆகி விட்டன. மாஸ் காட்டும் அஜீத்குமார் புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இப்போது படத்தில் வில்லனாக நடித்துள்ள ஆக்சன் கிங் அர்ஜூன் புகைப்படமும் வெளியாகி, வைரலாகி வருகிறது.

விடாமுயற்சி படத்தில் முதலில் ஒளிப்பதிவாளராக பணிசெய்தவர் நீரவ் ஷா. நீண்ட கால அனுபவமும், சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதுகளை பெற்ற நீரவ் ஷா தொடர்ந்து, அஜீத்குமார் படங்களில் பணிசெய்து வந்தார். இதற்கிடையே நீரவ் ஷா, டைரக்டர் மகிழ்திருமேனி இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், விடாமுயற்சி படத்தில் இருந்து அவர் சில மாதங்களில் விலகினார்.

அதன்பிறகு விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ் பணிசெய்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஓம்பிரகாஷ், விடாமுயற்சி படம் குறித்த சில விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அப்போது அவர் கூறுகையில், படம் சூப்பராக வந்துள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்படியாக விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி எடுத்துள்ளார்.

விடாமுயற்சி படத்தில் பேமிலி, டிராமா, சென்டிமென்ட், ஆக்சன் என படத்துக்குள் அனைத்து ஜானர்களும் இருக்கிறது, என்று கூறியிருக்கிறார். இந்த படம் 1997ம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக்டவுன் என்ற ஆங்கில படத்தின் ஈயடிச்சான் காப்பி என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டைட்டிலேயே இது, பிரேக்டவுன் படத்தின் காப்பி என்பதை போட்டுதான் படத்தையே ரிலீஸ் செய்ய உள்ளனர் என்பதும் கூடுதல் தகவல்.

சற்று முன்