- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்ஜெஸ்ட்மென்ட் பண்ணி ஈசியா ஹீரோயின் ஆகிடுறாங்க- வாய்விட்டு சர்ச்சையில் மாட்டிக்கொண்ட லியோ பட வில்லன்

அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணி ஈசியா ஹீரோயின் ஆகிடுறாங்க- வாய்விட்டு சர்ச்சையில் மாட்டிக்கொண்ட லியோ பட வில்லன்

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பதும் மேலும் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ உட்பட பலரும் நடித்து வருவதை ரசிகர்கள் அறிந்திருப்பார்கள்.

“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. தற்போது இத்திரைப்படத்தின் Post Production பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே  இத்திரைப்படம் LCUக்குள் வருமா? வராதா? என்ற கேள்விகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாது இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன் போன்ற பல ஜாம்பவான்கள் நடித்திருப்பதால் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக கடைசியாக ஒரு தகவல் வெளிவந்ததால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் “லியோ” படத்தின் வில்லனும் பாலிவுட்டின் மிகப் பிரபலமான நடிகருமான சஞ்சய் தத், ஒரு பேட்டியில் “சினிமாவில் பெரிய நடிகர்களாக ஆக வேண்டும் என்றால் அவர்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் சண்டை காட்சிகளிலும் சில சமயங்களில் விபத்துகள் நிகழும். இது போன்ற கடின உழைப்பாலேயே முன்னேற முடியும்.

ஆனால் நடிகைகளை பொறுத்தவரை இது எதுவும் தேவை இல்லை. கவர்ச்சி காட்டினாலே போதும் வாய்ப்புகள் குவிந்து விடும். மேலும் பெரிய ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டாலே போதும் அவர்களுக்கு பெரிய படங்களிலேயே வாய்ப்பு கிடைத்துவிடும். இதனால் நடிகைகள் ஹீரோக்கள் போல கடினமாக உழைக்க வேண்டிய தேவையே இல்லை” என்று கூறியிருக்கிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சஞ்சய் தத் கொடுத்த இந்த பேட்டி இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சற்று முன்