- Advertisement -
Homeபொழுதுபோக்குசியான் விக்ரம் நடிப்பில் வெளியாகும் தங்கலான் படத்தின் கதை இதுதான், அப்போ ரசிகர்களை பயங்கரமா மிரட்டி...

சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகும் தங்கலான் படத்தின் கதை இதுதான், அப்போ ரசிகர்களை பயங்கரமா மிரட்டி இருக்கிறாரா பா ரஞ்சித்? – வேற லெவல் சம்பவம்தான்!

- Advertisement -

நடிகர் விக்ரம் என்றாலே, நடிப்பில் ஒரு அசகாய சூரன்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் நடித்த அன்னியன், ஐ, பிதாமகன், சேது, காசி, தெய்வ திருமகள் உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு, காட்சிக்கு காட்சி ரசிகர்களை அசத்தியிருக்கும். ஒரு முழுமையான நடிப்பை, தரமாக வழங்குவதில் கமலுக்கு அடுத்தபடியாக விக்ரம்தான் என்ற பாராட்டை பெற்றவர்.

வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் டைரக்ட் செய்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கச்சுரங்கத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் கதைக்களம். அந்த பகுதியில் ஆங்கிலேயர் உத்தரவுப்படி தங்கம் தேடும் பணியில் விக்ரம், தனது ஆட்களுடன் ஈடுபடுவதுதான் கதை. அந்த காலகட்டத்தில் இருந்த உடை, வாழ்க்கை முறை, மனிதர்களின் இயல்பு, குணம் ஆகியவற்றை கொண்டதாக இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்கி தத்ரூபமாக படமாக்கி உள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.

இந்த படத்தை பொருத்தவரை, ரசிகர்களுக்கு ஒரு வித்யாசாமன அனுபவமாக தான் இந்த படம் இருக்கும். ஏனெனில் இந்த படத்தில் விக்ரமுக்கு அதிக வசனங்கள் கிடையாது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த சத்தங்களும், அங்கு நடந்த உரையாடல்களுமே படத்திலும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த படத்தில் பல காட்சிகளில் கோவணம் கட்டி மட்டுமே நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது என்பதற்காக, படத்தின் இயக்குனர் பா ரஞ்சித்தும் பல நேரங்களில் கோவணத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தில் சுரங்கத்தில் தங்கம் தேடும் விக்ரம் உள்ளிட்ட அவரது ஆட்களை ஒரு அமானுஷ்யம் தாக்குகிறது. பல்வேறு பிரச்னைகளை, திகிலூட்டும் சம்பவங்களை செய்கிறது. அந்த அமானுஷ்யம் கேரக்டரில் நடித்திருப்பவர்தான் நடிகை மாளவிகா மோகனன் என்று தெரிய வந்துள்ளது. அவர் ஆர்த்தி என்ற கேரக்டரில் தங்கலான் படத்தின் நடித்துள்ளார்.

ஆக மொத்தத்தில், தங்கலான் படம் ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை, தங்கச்சுரங்கத்தில் அவர்கள் அடிமைகளாக வாழ்ந்த விதம், அந்த நேரத்தில் அமானுஷயங்களால் அவர்கள் பாதிக்கப்படும் திரில் காட்சிகள் என இந்த படத்தை தரமான ஒரு சம்பவமாக இயக்குனர் பா ரஞ்சித் உருவாக்கி இருக்கிறார். மேலும் தங்கலான் படம் பல விருதுகளை வெல்லும் சிறந்த கலை படமாகவும், படைப்பாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்