- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, மிகவும் வருத்தப்படுகிறேன் - வெளிப்படையாக பேசி...

நடிகர் விஜய் இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, மிகவும் வருத்தப்படுகிறேன் – வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ்

- Advertisement -

முன்பெல்லாம் பல வெற்றிப் படங்களை தந்தாலும் கூட அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் தான் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறுவார்களே தவிர, அந்த படத்தின் இயக்குனர் யார் என்ற கவனம் ரசிகர்களுக்கு இருக்காது. அதைப் பற்றி அவர்கள் யோசிக்கவும் மாட்டார்கள். 30 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா அப்படிதான் இருந்தது.

ஆனால் இப்போதெல்லாம் படத்தின் இயக்குனர் யார், ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர், ஆர்ட் டைரக்டர், டான்ஸ் மாஸ்டர், இசையமைப்பாளர் என சகல விஷயங்களையும் ரசிகர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டாலே அந்த இயக்குனர் பப்ளிசிடி ஆகி விடுகிறார்.

அந்த வகையில், பரியேறும் பெருமாள் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராம் இயக்கிய படங்களில் உதவி இயக்குனாக பணிசெய்த அவர், முதன் முறையாக இயக்கி படம் பரியேறும் பெருமாள். சாதி பாகுபாட்டை மையப்படுத்தி படம் இது.

அடுத்ததாக தனுஷ், நட்டி, லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இதுவும் விளிம்பு நிலை மனிதர்களை அதிகாரத்தில் அடக்கி ஆளும் போலீஸ் துறையின் அடக்குமுறையை கதைக்களமாக கொண்ட படம்தான். இதுவும் வெற்றிப் படமானது.

தொடர்ந்து கதையின் நாயகனாக வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், அவரது படங்களால் விமர்சனங்களிலும், சர்ச்சைகளிலும் சிக்கினாலும் அவரது படங்கள் வெற்றி பெற்று விடுகின்றன.
இப்போது பைசன், வாழை ஆகிய படங்கள் அவரது இயக்கத்தில் வெளிவர உள்ளன.

இந்நிலையில் வாழை படம் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் விஜய் குறித்து பேசுகையில், தளபதி விஜயின் மிக தீவிரமான ரசிகன் நான். அவருக்காக மன்றம் எல்லாம் வைத்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் அவர் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவை விட்டு விலகுவது எனக்கு பெரிய வருத்தத்தை தந்துள்ளது. அவர் இப்படி செய்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை, நினைத்தது கூட இல்லை என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சற்று முன்