- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இப்படி கூட வித்யாசமாக யோசிக்கலாமா? ஆனா படத்துக்கு இதுவே பெரிய பிரமோசனாக மாறிடுச்சே…...

அட இப்படி கூட வித்யாசமாக யோசிக்கலாமா? ஆனா படத்துக்கு இதுவே பெரிய பிரமோசனாக மாறிடுச்சே… – அசத்திய தங்கலான் படக்குழு

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். வரும் 15ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தங்கச்சுரங்கத்தில் பணிசெய்த தொழிலாளர்களின் அடிமை வாழ்க்கை முறையை சொல்லும் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளதால், பல விருதுகளை அள்ளும் கலைப்படைப்பாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கடந்த வாரத்தில், தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் பேசிய நடிகர் விக்ரம், தன் சினிமா பயணத்தில், சொந்த வாழ்க்கையில் கிடைத்த பல அனுபவங்களை வெளிப்படையாக ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்துக்கொண்டார். இந்த படத்தில் நடிக்க பல கஷ்டங்களை தாங்கிக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டார்.

வரும் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று இந்த படம் வெளியாவதை முன்னிட்டு பல்வேறு நகரங்களில், பிற மாநிலங்களில் தங்கலான் படத்தின் பிரமோ நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இயக்குனர் பா ரஞ்சித், நடிகர் விக்ரம் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், கேரளாவில் தங்கலான் படத்தின் பிரமோ நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வயநாடு நிலச்சரிவு சம்பவத்தால் அந்த மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பிரதமர் மோடி நேற்று நேரில் வந்து நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

இந்த சூழலில், அங்கு தங்கலான் படம் குறித்த பிரமோ நிகழ்ச்சியை ரத்து செய்த படக்குழு, அதற்கான செலவாக ஒதுக்கியிருந்த ரூ. 5 லட்சத்தை கேரள அரசுக்கு, வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்து, அதை வழங்கியும் உள்ளது. பிரமோ நிகழ்ச்சிக்கான தொகையை, முதல்வர் நிவாரண நிதியாக வழங்கியதே, படத்துக்கு மிகப்பெரிய பிரமோவாக மாறிவிட்டதாக, ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்