- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குனர் இவர்தான், லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்து உறுதிப்படுத்திய வேல்ஸ் பிலிம்ஸ்...

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குனர் இவர்தான், லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்து உறுதிப்படுத்திய வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் – ஆனா படத்துல டைரக்டரும் நடிக்கறாரான்னு சொல்லலையே?

- Advertisement -

கடந்த 2020ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். ஆர் ஜே பாலாஜி ஹீரோவாகவும் நடிகை ஊர்வசி அவரது அம்மாவாகவும் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

மூக்குத்தி அம்மனை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த படத்தில் பல சமூக கருத்துக்களையும் அரசியல் நிலைப்பாடுகளையும் குறிப்பாக போலி சாமியார்கள் மக்களை ஏமாற்றும் மோசடிகளையும் கதைக்களமாக்கி நடிகர் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கி இருந்தார்.

மூக்குத்தி அம்மன் வெளியாகி 4 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகமாக மாசாணி அம்மன் என்ற படத்தை இயக்கப் போவதாக நடிகர் ஆர் ஜே பாலாஜி அறிவித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிப்பதாகவும் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் அந்த அறிவிப்பு வெளியிட்ட சில நாட்களில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தின் அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டது. இந்த படத்தில் நடிகை நயன்தாராவே மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவலையும் உறுதிப்படுத்தியது. இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்பதில் ரசிகர்களுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. நேற்று மாலை இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட வேல்ஸ் பட நிறுவனம், நாளை (இன்று) மாலை மூக்குத்தி அம்மன் 2 குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகும் என்று அறிவித்திருந்தது.

அதன்படி இன்று மாலை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிவிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கப் போவது இயக்குனர் சுந்தர் சி என்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த படத்தில் சுந்தர் சி நடிக்கிறாரா, இயக்குனராக மட்டுமே செயல்படுகிறாரா என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது. அரண்மனை 4 என்ற பேய் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்ற இயக்குனர் சுந்தர் சி, மூக்குத்தி அம்மன் 2 பக்தி படத்தை எப்படி தர போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சற்று முன்