- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்த தி கோட் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறதா? தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா கொடுத்த...

விஜய் நடித்த தி கோட் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறதா? தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் – அப்போ அந்த விஷயமும் நாளைக்கு கன்பார்ம் ஆகுதா?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் அப்டேட் ஆகியிருக்கின்றன. விஜய் இந்த படத்தில் 3 ரோல்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று கேமியோ ரோல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நிறைய அம்சங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மைக் மோகன் வில்லனாக இந்த படத்தில் நடித்துள்ளார். பிரசாந்த் விஜய்க்கு நண்பராக நடித்துள்ளார். வசீகரா படத்துக்கு பின், பல ஆண்டுகள் கழித்து சினேகா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். அத்துடன் இந்த படத்தில் கிளைமாக்ஸில் கெஸ்ட் ரோலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த படத்தில் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், விவேக் ஆகிய இருவரும் ஏஐ தொழில்நுட்பத்தில் வருகின்றனர். அவர்கள் வரும் காட்சிகள் மிக நேர்த்தியாக, ஏஐ தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இதுவரை எந்த படத்திலும் அவர் நடிக்காத படத்தில் அயிட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போடாத நடிகை திரிஷா, தனது நெருங்கிய நண்பர் விஜய்க்காக இந்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

தி கோட் படத்தில் இதுவரை வெளியான 3 பாடல்களுமே விஜய் ரசிகர்களையே பெரிய அளவில் இம்ப்ரஸ் செய்யாத நிலையில், டிரெய்லரை மிக சிறப்பாக கொடுக்கும்படி தி கோட் படத்தின் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி அர்ச்சனா ஆகியோர் இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.

- Advertisement -

அதன்படி படத்தில் உள்ள அனைத்து சிறப்பு அம்சங்களும் டிரெய்லரில் வந்துவிட வேண்டும். 3 பாடல்களுமே ரசிகர்களை கவராத நிலையில், டிரெய்லர் மூலமாக ரசிகர்களை மொத்தமாக தன்வசப்படுத்தி விட வேண்டும். அந்த அளவுக்கு டிரெய்லரை மிகவும் மாஸ் ஆக கொடுக்க வேண்டும் என்று வெங்கட்பிரபுவிடம் அவர்கள் கட்டாயமாக கூறியுள்ளனர்.

அதனால், நாளை சுதந்திர தினத்தன்று ஏற்கனவே கூறியபடி தி கோட் டிரெய்லர் வெளியாகுமா, அல்லது இன்னும் சில தினங்கள் தள்ளிப் போகுமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. ஆனால் நேற்று தி கோட் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா, தி கோட் டிரெய்லர் 2 நாட்களில் ரெடியாகி விடும். அத்துடன் படம் வெளியீடு ரிலீஸ் தேதி குறித்த தகவலும் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்