- Advertisement -
Homeபொழுதுபோக்குமாவீரன் படக்குழுவை பயங்கரமாக டார்ச்சர் செய்த மிஷ்கின், ஒரு அளவுக்குத்தானே பொறுமையா இருக்க முடியும்

மாவீரன் படக்குழுவை பயங்கரமாக டார்ச்சர் செய்த மிஷ்கின், ஒரு அளவுக்குத்தானே பொறுமையா இருக்க முடியும்

- Advertisement -

மிஷ்கின் சமீப காலமாக டைரக்சனை விட்டுவிட்டு நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் இயக்கிய “பிசாசு 2” திரைப்படம் எப்போது வெளிவரும் என்பது குறித்த தகவல்களே இல்லை. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகர்கள் திரைப்படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட “மாவீரன்” திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் மிஷ்கினின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

“மாவீரன்” திரைப்படத்தை தொடர்ந்து மிஷ்கின் விஜய்யின் “லியோ” படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன் நடிகராக மிஷ்கின் உருவாகி வருகிறார். இந்த நிலையில் “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது மிஷ்கின் படக்குழுவை பயங்கரமாக டார்ச்சர் செய்ததாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும்போது திடீரென “சிவா முகம் ரொம்ப வாடிப்போயிருக்கு. ரெஸ்ட் எடுத்துட்டு வந்து நடிக்க சொல்லுங்களேன்” என்று மிஷ்கின் இயக்குனரிடம் கூறுவாராம். சிவகார்த்திகேயனே “நான் சோர்வாக இல்லை” என்று கூறினாலும் மிஷ்கின் விடமாட்டாராம். இப்படி சிவகார்த்திகேயன் மீது அக்கறை காட்டுவது போல் இயக்குனரை பிடித்து டார்ச்சர் செய்வாராம்.

அது மட்டுமல்லாது, இரவு நேர படப்பிடிப்புகளில் இயக்குனரை அருகில் உட்காரவைத்து, “நாளை படமாக்கப்படவுள்ள காட்சிகளை குறித்து டிஸ்கஸ் செய்யலாம் வாங்க” என்று கூறி நான்கு மணி நேரங்களுக்கு மேல் பேசி பேசியே டார்ச்சர் செய்வாராம். சில நேரம் இயக்குனர் மிஷ்கின் அழைப்பை ஏற்று போகமாட்டாராம். இயக்குனர் வரவில்லை என்றால் உதவி இயக்குனர்களை அழைத்து ரம்பம் போடுவாராம். இவ்வாறு படக்குழுவினரை மிஷ்கின் டார்ச்சர் செய்வாராம். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன், தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சற்று முன்