தமிழக முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அவரது அப்பாவை போல சினிமாவில் நடிக்க வராமல் அவரது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல டைரக்டர் ஆகியிருக்கிறார். அவரது இயக்கத்தில் முதல் படமாக சிக்மா படம் உருவாகியுள்ளது. சந்தீப் கிஷன் பரியா அப்துல்லா முதன்மை கேரக்டரில் நடித்த இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நேற்று ஜூலை 31ம் தேதி வெளியாக வேண்டிய இந்த படம் நடிகர் விஜயின் கடைசி படம் ஜனநாயகன் கடந்த 23ம் தேதி வெளியானதால் சிக்மா படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அதே போல் பல படங்கள் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டது. ஆனால் அந்த அளவுக்கு ஜனநாயகன் பெரிய அளவில் வரவேற்பை வசூலை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மிக விரைவில் சிக்மா படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். சிக்மா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக ஜேசன் சஞ்சய் நேற்று கலந்துக்கொண்ட ஒரு நேர்காணலில் கூறியதாவது, சின்ன வயதில் இருந்தே எனக்கு ஒரு பழக்கம் உள்ளது. கதை சொல்வது என்பது ரொம்ப பிடிக்கும்.
அதில் படக் கதையாக கூட இருக்க வேண்டியதில்லை. அது நண்பர்களுடன் பேசுவதாக கூட இருக்கலாம். எனக்கு எழுதும் பழக்கமும் உள்ளது. எனக்கு தோணும் விஷயங்களை எழுதியோ அல்லது டைப் செய்தோ வைத்துக் கொள்வேன். இந்த பழக்கத்திற்கு பிறகு தான் எனக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது.
இதை முறையாக செய்யலாம் என்று டொரோண்டாவில் ஒரு பிலிம் ஸ்கூலில் அதற்கான படிப்பில் சேர்ந்து படித்தேன். பிலிம் மேக்கிங் உடன் அது தொடர்புடைய எல்லா துறைகளையும் சேர்த்து இருந்தது. அப்போதுதான் நான் எதை தொடர வேண்டும் என்பதை அறிந்தேன். முன்னதாக எனக்கு பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அப்புறம் கிரிக்கெட் மீதும் ஆர்வம் இருந்தது என்று அந்த நேர்காணலில் ஜேசன் சஞ்சய் கூறியிருக்கிறார். ஹாலிவுட்டில் நடிகர் ஜேசன் ஸ்டேதம் உங்களை டைரக்ட் செய்ய அழைத்தால் இந்தியாவில் எந்த நடிகரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு என் அப்பாவை தான் அழைப்பேன். இருவரும் கோட் சூட் போட்டு நடித்தால் நல்ல காம்பினேஷாக இருக்கும் என்றும் அப்போது ஜேசன் கூறியிருக்கிறார்.





