- Advertisement -
Homeபொழுதுபோக்குமகன் ஜெயம் ரவி கால்ஷீட் தராததால் அதிருப்தியடைந்த அப்பா எடிட்டர் மோகன், அதிரடியாக அவர் எடுத்த...

மகன் ஜெயம் ரவி கால்ஷீட் தராததால் அதிருப்தியடைந்த அப்பா எடிட்டர் மோகன், அதிரடியாக அவர் எடுத்த முடிவு – போடு வெடிய, ஜெயம் ரவி ரசிகர்கள் குஷி

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எடிட்டர் மோகனின் இளைய மகன். மூத்த மகன் மோகன் ராஜா. இவர் இயக்குனராக உள்ளார். மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த படங்கள்தான் ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளரான எடிட்டர் மோகன்தான், தனது மூத்த மகன் மோகன்ராஜா இயக்கத்தில், இளைய மகன் ஜெயம் ரவி நடித்த இந்த 2 படங்களையும் தயாரித்து இருந்தார். அதன்பிறகு தனது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்த அடங்க மறு, சைரன், அகிலன் உள்ளிட்ட சில படங்களில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக ஜெயம் ரவி நடித்த பல படங்கள் பிளாப் ஆகி விட்டன. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 படங்களில் மட்டுமே ஜெயம் ரவி நடிப்பு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அருண்மொழி வர்மன் கேரக்டரில் சிறந்த நடிப்பை ஜெயம் ரவி வெளிப்படுத்தி இருந்தார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு 4 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் விக்ரம், கார்த்தி என மற்ற முன்னணி ஹீரோக்களும் இதில் நடித்திருந்ததால் ஜெயம் ரவிக்கு, பொன்னியின் செல்வன் தந்த வெற்றி தனிப்பட்ட முறையில் பெரிய வரவேற்பை பெற்றுத் தரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் தனது அப்பா எடிட்டர் மோகன் தயாரிக்கவும், அண்ணன் மோகன் ராஜா இயக்கவும் கால்ஷீட் தராமல் இருந்து வருகிறார் ஜெயம் ரவி. கடந்த சில மாதங்களாக துபாயில் தங்கி ஓய்வெடுத்து வரும் நடிகர் ஜெயம் ரவி, பழையபடி நிறைய படங்களில் நடிக்க வேண்டும், முன்பு போலவே வெற்றிப் படங்களை தர வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

ஆனால் அவர் தனது அப்பா, அண்ணன் ஆகியோருக்கே கால்ஷீட் தராமல் இருந்து வருகிறார். இதனால் ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன் அவர் தயாரித்த ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மற்றும் தெலுங்கில் அவர் தயாரித்த சில படங்கள் என மொத்தம் 5 படங்களை ரி ரிலீஸ் செய்யும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதன்மூலமும் ஒரு கணிசமான லாபம் காண முடியும் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி விட்டார். அதனால் ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படங்களை மீண்டும் திரையரங்குகளில் ரசிக்க ஜெயம் ரவி ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

சற்று முன்