தளபதி விஜயின் கோட் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் கூட இல்லை. செப்டம்பர் 5ஆம் தேதிக்காக விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, பல திரையரங்குகளிலும் டிக்கெட் முன்பதிவை தொடங்குவதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன.
மற்ற திரைப்படங்களைப் போலவே கோட் படத்தின் மீதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிக்கிறார். இதில் மகன் கதாபாத்திரம் 25 வயதுடைய இளைஞர் என்பதால், அவரை மிகவும் இளமையாக காட்டுவதற்கு டிஏஜிங் முறையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. யுவன் சங்கர் ராஜா இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் இணையத்தில் நேரடியாகவே பேச ஆரம்பித்தனர். இருப்பினும் படத்திலிருந்து பார்க்கும்போது அது நன்றாக இருக்கும் என்று வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
அண்மையில் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களை கவரும் வகையிலேயே அமைந்தது. முழுக்க முழுக்க இந்த திரைப்படம் ஒரு கமர்சியல் மெட்டீரியலாக எடுக்கப்பட்டிருக்கிறது. படத்திலும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இதில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாடி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதே போல் மறைந்த நடிகர் விஜயகாந்தையும் டி ஏஜிங் முறையில் பயன்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் இறுதிக் காட்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பங்கேற்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி ஏராளமான சுவாரசியங்களை வெங்கட் பிரபு வைத்துள்ளார். இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை, ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
படத்திற்கு யுஏ சான்றுகளை தணிக்கை குழு அளித்துள்ளது. இந்த திரைப்படம் முதலில் இரண்டு மணி நேரம் 37 நிமிடங்கள் ஓடுவதாக தான் இருந்தது. ஆனால் தற்போது அதற்கான நேரம் கூட்டப்பட்டிருக்கிறது. மொத்தம் மூன்று மணி நேரம், மூன்று நிமிடங்கள் படம் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது வெங்கட் பிரபு படத்தில் எப்போதுமே இருக்கும் ப்ளுபெர்ஸ் மூன்று நிமிடங்கள் இடம் பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





