- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து உறுதியான தகவல்; தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடிக்கிறார்...

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து உறுதியான தகவல்; தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடிக்கிறார் – திருமணம் எங்கே எப்போ என்று தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான அழகான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் அவர் நடித்த பைரவா, சர்கார், ரெமோ, ரஜினி முருகன், தொடரி, சாமி 2, அண்ணாத்த, சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக இருந்தன.

அதிலும் குறிப்பாக தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாகி, தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியான படத்தில், மறைந்த நடிகை சாவித்திரி தேவி கேரக்டரில், அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். இதற்காக அவருக்கு மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருதும் கிடைத்தது.

- Advertisement -

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் பல நடிகைகள் மிக அழகானவர்களாக இருப்பது மட்டுமின்றி நடிப்பிலும் சிறந்த திறமையாளர்களாக இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷூம் திறமையான ஒரு நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறார்.

சினிமா நடிகைகள் என்றாலே அடிக்கடி அவர்களது திருமணம் குறித்த வதந்திகள் பரவுவது வழக்கம். இயக்குனர், நடிகர், தொழிலதிபர், இசையமைப்பாளர், நெருங்கிய நண்பர் என யாரையேனும் அவர்கள் திருமணம் செய்துக்கொண்டதாக இணையத்தில் வதந்தி பரப்பி விடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

இந்த சூழலில், நடிகை கீர்த்தி சுரேஷூக்கும் விரைவில் திருமணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது 100 சதவீதம் உண்மையான தகவல். நீண்ட நாட்களாக கீர்த்தி சுரேஷ் காதலித்து வரும் ஒரு இளைஞரை தான் விரைவில் கீர்த்தி சுரேஷ் கரம் பிடிக்க உள்ளார் என்ற தகவல் இப்போது உறுதியாகி உள்ளது.

வருகிற டிசம்பர் மாதம் 11ம் தேதி, கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என இந்த திருமணத்தை நடத்த கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருமணத்துக்கு பிறகும் கீர்த்தி சுரேஷ் நடிப்பை தொடர வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்