- Advertisement -
Homeபொழுதுபோக்குபரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க போறது அந்த பிரபல இயக்குனரா?...

பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க போறது அந்த பிரபல இயக்குனரா? வில்லனாக நடிக்க அவர் வாங்கும் தினசரி சம்பளம் எவ்ளோ தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு எப்போது மவுசு ஜாஸ்தியாக தான் இருந்து வருகிறது. ஹீரோ நடிகர்கள் வில்லனாக நடித்தாலும், வில்லன் நடிகராக ஹீரோவாக நடித்தாலும் எப்போதுமே ரசிகர்களிடம் தனி கவனத்தை பெற்று விடுகின்றனர். அதில் ரஜினிகாந்த், சத்யராஜ், ரகுவரன், நாசர், பிரகாஷ் ராஜ் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சமீபகாலமாக வில்லன் நடிப்பில் அசத்திக்கொண்டு இருப்பவர் எஸ்ஜே சூர்யா. அதே போல் மற்ற ஒரு வில்லன் நடிகராக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் இயக்குனர் மிஷ்கின். மாவீரன் படத்திலும், லியோ படத்திலும் வில்லன் நடிப்பில் மிரட்டியிருந்தார் மிஷ்கின். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன் சவரக்கத்தி படத்தில் வில்லனாக நடித்திருந்தார் மிஷ்கின்.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் என்ற படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்போது விஜய் சேதுபதி அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார். இதில் நித்யாமேனன் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இவர் சமீபத்தில்தான் திருச்சிற்றம்பலம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகை தேசிய விருதுக்கு அறிவிக்கப்பட்டவர் என்பது கவனிக்கத்தக்கது.

விஜய் சேதுபதிக்கு வில்லனாக இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். ஒரு டைரக்டராக மிஷ்கின் எந்தளவுக்கு அசத்துவாரோ, அதைவிட பலமடங்கு நடிப்பில் ரசிகர்களை மிரட்டி விடுவார் மிஷ்கின் என்பதும் குறிப்பிடத்தக்கது. லியோ படத்தில் மிஷ்கின் படம் முழுவதும் வந்திருந்தால் அந்த படம் நிச்சயம் இன்னும் பேசப்பட்டு இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கூறினர்.

விஜய் சேதுபதியுடன் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கு இந்த படத்தில் ஒரு நாள் சம்பளமாக ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் மிஷ்கின் நடிக்கிறார். அந்த படத்தில் தினசரி சம்பளமாக ரூ. 12 லட்சம் பெற்றிருக்கிறார். ஒரு நாள் சம்பளம் ரூ. 15 லட்சம் கேட்ட நிலையில் ரூ. 12 லட்சம், ரூ. 10 லட்சம் என சம்பளம் பெற்று வருகிறார் மிஷ்கின் என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

சற்று முன்