- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் பாட்டுக்கு போட்டியாக களமிறங்கும் மனசிலாயோ பாட்டு… மீண்டும் தெறிக்க விடுவாரா சூப்பர் சுப்பு -...

ஜெயிலர் பாட்டுக்கு போட்டியாக களமிறங்கும் மனசிலாயோ பாட்டு… மீண்டும் தெறிக்க விடுவாரா சூப்பர் சுப்பு – வேட்டையன் பாட்டு எப்போ ரிலீஸ் தெரியுமா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இன்னும் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார். தங்களது வீட்டில் 73 வயது ஆன முதியவர் இருந்தால் தாத்தா, பார்த்து நடங்க என்று எச்சரிக்கை செய்து, வயதான கிழவர் என்ற எண்ணத்தில்தான் பெரும்பாலும் பார்ப்பார்கள். ஆனால் அதே 73 வயதான ரஜினிகாந்த்தை ரசிகர்கள் இன்னும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடி வருகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை தராமல் ஏமாற்றம் தந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய அளவில் கம்பேக் கொடுத்த படம் ஜெயிலர். அதுவும் இன்னொரு பாட்ஷா அளவுக்கு ரஜினிக்கு பில்டப் கொடுத்து உயர்த்தி விட்டது.

இந்த படத்தை பொருத்தவரை, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் சிவாஜி கணேசன், ஸ்ரீகாந்த் அப்பா, மகனாக நடித்த அதே போலீஸ், திருடன் கதைதான். சமூக விரோதியான தனது மகனை போலீஸ் அதிகாரி சிவாஜி கணேசன் சுட்டுக்கொல்வது போல், இந்த படத்திலும் தனது மகனை சுட்டுக்கொல்வார் நடிகர் ரஜினிகாந்த்.

ஜெயிலர் படத்தை பொருத்த வரை திரைக்கதைதான் ரஜினிக்கு பெரிய பக்கபலமாக இருந்தது. அதே போல் சண்டை காட்சிகளும் ஸ்டண்ட் சிவா, மிக சிறப்பாக செய்திருந்தார். குறிப்பாக அனிருத் இசை இந்த படத்தை தோல்வியடைய விடாமல் தாங்கிப் பிடித்தது என்றால் அது மிகையல்ல. அதிலும் பாடல்களில் அனிருத் பின்னி பெடலெடுத்து ரஜினி ரசிகர்களை குதூகலிக்க வைத்திருந்தார்.

இந்த படத்தில் ரஜினி காட்டிய மாஸ் நடிப்பும், ஸ்டைலும், வில்லனை எதிர்கொள்ள அவர் செய்யும் தந்திரங்களும் படத்தை ஜெயிக்க வைத்தது. மேலும் தமன்னா காவாலா பாட்டுக்கு நடனமாடி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தார். அதிலும் இந்த படத்தில் ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவராக சூப்பர் சுப்பு, அலப்பரை கௌப்பறோம் இதோ பாருடா, தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா என்ற பாடலில் அடித்து நொறுக்கி வேற லெவலில் படத்தை ரசிக்க வைத்தார்.

இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற முதல் பாடல், மனசிலாயோ என்று துவங்கும் பாடல், வருகிற 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த பாட்டை எழுதியவரும் சூப்பர் சுப்புதான். அதனால் ஜெயிலர் படப் பாடல் போலவே, இதுவும் மாஸ் தெறிக்க விடுமா என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சற்று முன்